மஸ்கெலியா நிருபர் செ.தி.பெருமாள்.20.02.2024.
மவுஸ்சாக்கலை நீர்த்தேக்கத்திற்கு (18) மேல் உள்ள ரிக்காடன் பகுதியில் உள்ள சிவனடி பாதமலை தொடர் வனப் பகுதியில் ஏற்பட்ட தீ கடந்த 03 நாட்களாக தொடர்ந்து பரவிய இந்த தீ, தற்போது சிவனடி பாத மலை தொடர் வனப் பகுதியில் உள்ள எமிலடன் டேப்பன் டைன் வனத்தில் இந்த தீ பரவியது.
இந்த பகுதியில் பலத்த காற்றுடன் கடும் வெப்பமான காலநிலை தோன்றுவதால் தீ வேகமாக பரவி வருகிறது.
தீயை அணைப்பது மிகவும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளதாக நல்லதண்ணி பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மவுஸ்ஸாக்கலை நீர்த்தேக்கத்திற்கு நீர் வழங்கும் நீர்நிலைகள் அதிகம் உள்ள இந்த தீ பரவியதால் வன விலங்குகள் அழிந்து போகும் நிலை தோன்றியுள்ளது அத்துடன் பெரும் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
ஒவ்வொரு முறையும் வறண்ட காலநிலை ஏற்படும் போது இப்பகுதியில் உள்ள சில விஷமிகள் வேட்டையாடுவதற்காகவும் வேடிக்கைக்காகவும் இந்த தீயை வைப்பதாகவும், இவர்களுக்கு எதிராக சட்டத்தை கடுமையாக அமுல்படுத்த வேண்டுமெனவும், அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
நல்லதண்ணி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் சாந்த வீரசேகர பிரதேச வாசிகளுடன், லக்சபான தோட்டத்தில் உள்ள தொழிலாளர்கள் இணைந்து தீ பரவாமல் தடுத்து அணைக்க பலத்த முயற்சிகளை மேற்கொண்டனர்.

