ஹட்டன் குயில்வத்தையில் பிரதேசத்தில் பாடசாலை தமிழ்ப் ஒன்று ஆரம்பிக்கப்பட்டு 40 வருடங்களை பூர்த்தி செய்கின்றது. இப்பாடசாலையில் கல்விப் பொது தர சாதாரணதரம் ஆரம்பிக்கப்பட்டு 25 ஆண்டுகள் பூர்த்தியாகின்ற இந்த முக்கியமான நாளில் குயில்வத்தை தமிழ் மஹா வித்தியாலயத்திலிருந்து சாதனை படைத்த மாணவர்களை கௌரவிக்கும் “சாதனைக் குயில்கள் 2024” எனும் நிகழ்வு நடைபெறவுள்ளது.
இந் நிகழ்வானது பாடசாலையின் தற்போதைய அதிபர் திரு எம் வேலு அவர்களின் தலைமையில் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 25 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு பாடசாலையின் பிரதான மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
ஹட்டன் கல்வி வலய அலுவலகத்தின் பணிப்பாளர் திரு. விஜேந்திரன் அவர்களின் ஆதரவுடன், பாடசாலையின் பழைய மாணவர்கள் ஏற்பாட்டில் நடைபெறவுள்ள இந்நிகழ்விற்கு சிறப்பு அதிதியாக பரீட்கைள் திணைக்களத்தின் புலனாய்வு பிரிவின் பிரதி ஆணையாளர் திரு எம். விஸ்வநாதன் கலந்து சிறப்பிக்கவுள்ளார்.
ஊடக நண்பர்கள் இந்த நிகழ்வுக்கு முக்கியத்துவம் வழங்கி உலகரியச்செய்ய செய்தியாக்குமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
இடம்: குயில்வத்தை தமிழ் மகா வித்தியாலயம்
காலம்: 2024 பெப்ரவரி 25 காலை 10 மணி (ஞாயிற்றுக்கிழமை)
தொடர்புகளுக்கு திரு புண்ணியமூர்த்தி 077 007 0554 செயலாளர் பழைய மாணவர் சங்கம்
