புத்தாக்கம் நிறைந்த புதுமைகளையும் வானளாவிய சாதனைகளையும் கடந்த 04 தசாப்தங்களாக நிகழ்த்தி வரும் தலவாக்கலை தமிழ் மகா வித்தியாலயத்தின் 45வது வருட பூர்த்தி விழா மிக கோலாகலமாக நடைபெறவுள்ளது.
இம் மாபெரும் அகவை தின சிறப்பு நிகழ்வில் மாபெரும் கண்காட்சி , கெளரவிப்பு நிகழ்வுகள், பரிசளிப்பு நிகழ்வுகள், கலை கலாச்சார நிகழ்வுகள், 45 வது ஆண்டு நிறைவு சிறப்பு நூல் வெளியீடு, பல் பொருள் அங்காடி மேலும் பாடசாலை சமூகம் சார்ந்தோரின் நடை பவனி என்பன இடம்பெறவுள்ளது. எதிர் வரும் மார்ச் மாதம் 22,23,24 மற்றும் 25 ஆம் திகதிகளில் காலை 9.00 மணிமுதல் மாலை 6.00 மணிவரை இந் நிகழ்வுகள் நடைபெற ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
வரலாற்றில் தடம் பதிக்கவிருக்கும் இந் நிகழ்வில் கலந்து சிறப்பிக்குமாறு அனைவரையும் அன்போடு அழைக்கின்றார்கள்.
கௌசல்யா.
