உலக நீர் தின விழா (22.03.2024) “சமானத்துக்காக நீர்” எனும் தொனிப்பொருளில் இரத்மலானையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட நீர் மற்றும் துப்புரவேற்பாட்டுக்கான சிறப்பு மையத்தின் கேட்போர் கூடத்தில் அமைச்சர் ஜீவன் தொண்டமான் தலைமையில் இடம்பெற்றது.

உலக நீர் தினத்தை முன்னிட்டு நாடாளவீய ரீதியில் நடாத்தப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கான ஓவியம், கட்டுரை, மேடை நாடகம் உள்ளிட்ட போட்டிகளில் வெற்றிபெற்றோருக்கான பரிசில்களும் இதன்போது வழங்கி வைக்கப்பட்டது.
குறித்த போட்டியில் மத்திய மாகாணத்தை பிரநிதித்துவப்படுத்தி கனிஷ்ட பிரிவில் சித்திரப் போட்டியில் ஹட்டன் ஹைலண்ட்ஸ் பாடசாலை மாணவன் பிரபகரன் லவ்னிஸ் தேசிய ரீதியில் முதலாமிடத்தைப் பெற்றுள்ளார்.
