நுவரெலியா மாவட்டத்தில் 127 உணவகங்கள் மற்றும் வெதுப்பகங்கள் சுகாதார அமைச்சுக்கு கீழ் இதுவரை பதிவு செய்யப்பட்டுள்ளன.
இது தொடர்பில் லிந்துலை பொது சுகாதார வைத்திய அதிகாரி ரேஸ்னி துரைராஜா தெரிவிக்கையில்,
நுவரெலியா மாவட்டத்தில் முதல்முறையாக சுகாதார அமைச்சுக்கு கீழ் இவ்வாறு உணவகங்களை பதிவு செய்யும் வேலைத்திட்டத்தை ஆரம்பித்ததோடு மக்களுக்கு சுத்தமான உணவுகளை வழங்குமுகமாக
உணவுகளை தயாரிக்கும் உணவுசார்ந்த வேலைகளில் ஈடுபடும் 450 பேருக்கு ஊசிகளும் போடப்பட்டன.
இதேவேளை பாடசாலைகளிலும் ,சிறுவர் பராமரிப்பு நிலையங்mகளிலும் உணவு தயாரிப்பில் ஈடுபடுவோருக்கும் இதன் போது நெருப்பு காய்ச்சலுக்கு எதிரான ஊசிகள் போடப்பட்டதோடு சான்றிதழ்களும் வழங்கப்பட்டன எனஅவர் தெரிவித்தார்.


