Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

ஹட்டன் நகரில் ஆடை விற்பனை நிலையத்தில் திருட்டு – சி.சி.டி.வி. காட்சிகள் வெளியானது

November 25, 2026

கினிகத்தேனை பகுதியில் கனரக வாகனம் குடைசாய்ந்து விபத்து சாரதிக்கு காயம்

November 25, 2026

இலங்கைக்கு எவ்வித சுனாமி அச்சுறுத்தலும் இல்லை

November 24, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » மீண்டும் 28இலட்சம் குடும்பங்களுக்கு இலவச அரிசி விநியோகம் – இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்ஹ
Breaking

மீண்டும் 28இலட்சம் குடும்பங்களுக்கு இலவச அரிசி விநியோகம் – இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்ஹ

ThanaBy ThanaApril 9, 2024No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

இலவச அரிசி விநியோக நிகழ்ச்சித் திட்டம் இம்முறையும் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடைமுறைப்படுத்துவதற்கு அரசாங்கம் தயாராகியுள்ளதாகவும் அதற்காக இதுவரை எவ்வித நிவாரண வேலைத் திட்டத்திலும் பங்குபற்றாத நபர்களை உள்ளடக்கியதாகவும் இத்திட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்தார்.

மிகிந்தலை, விளச்சிய, நாச்சியாதுவ உட்பட பல பிரதேசங்களில் அபிவிருத்தி நிகழ்ச்சியை ஆரம்பித்து இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.

அதற்கிணங்க தற்போது அஸ்வெசும பெறும் மற்றும் அதற்கு விண்ணப்பித்துள்ள நபர்களுக்கும், இதற்கு முன்னர் சமுர்த்திப் பயனாளிகளாக இருந்தும் அஸ்வெசும திட்டம் கிடைக்கப் பெறாதவர்களுக்கும், சிறுநீரக நோய், முதியோர் மற்றும் மாற்றுத் திறனாளி ஆகிய கொடுப்பனவுகளைப் பெறும் நபர்கள் போன்றோருக்கும் இவ்வரிசி வழங்கப்படவுள்ளது.

அதுதவிர இவ்வனைத்து நிவாரண வேலைத்திட்டங்களிலும் கைவிடப்பட்ட நபர்களாயின் அவர்களையும் இத்திட்டத்தில் இணைப்பதற்கான அதிகாரம் பிரதேச செயலாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

20கிலோ அரிசி வீதம் இம்முறை தெரிவு செய்யப்பட்ட குடும்பங்களுக்கு உரித்தானதுடன் கடந்த தடவை 27.5 இலட்சம் குடும்பங்கள் இந்நிவாரணத்திற்கான தகுதி பெற்றிருந்தன.

எரிபொருள், மின்சாரம் போன்ற சேவைகளுக்காக குறைந்த விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளதுடன் சுற்றுப் புறத்தில் அரசாங்கத்தின் உதவிகளை பொருத்தமானவர்களுக்கு வழங்குவதற்கே அரசாங்கம் எதிர்பார்ப்பதாக அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    ஹட்டன் நகரில் ஆடை விற்பனை நிலையத்தில் திருட்டு – சி.சி.டி.வி. காட்சிகள் வெளியானது

    November 25, 2026

    கினிகத்தேனை பகுதியில் கனரக வாகனம் குடைசாய்ந்து விபத்து சாரதிக்கு காயம்

    November 25, 2026

    இலங்கைக்கு எவ்வித சுனாமி அச்சுறுத்தலும் இல்லை

    November 24, 2026

    நாட்டின் பல பகுதிகளில் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் ஆங்காங்கே மழையோ அல்லது இடியுடன் கூடிய மழைக்கு சாத்தியம் .

    November 24, 2026
    Editors Picks

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.