நாவலபிட்டி-தொலஸ்பாகேவில் இருந்து நாவலப்பிட்டி நகரை நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் ஒன்று உடுவெல்ல பிரதேசத்தில் விபத்துக்குள்ளாகியுள்ளது.
குறித்த விபத்து இன்று(09/04) காலை 6.45 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
விபத்தில், மூன்று பாடசாலை மாணவர்கள் உட்பட ஆறுபேர் காயமடைந்து நாவலப்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்து தொடர்பில் நாவலபிட்டிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
