நுவரெலிய கல்வி வலயத்தின் – தலவாக்கலை சென்கிளையர் தமிழ் மகா வித்தியாலயத்தின் 80 வது ஆண்டு நிறைவு விழாவும், ‘பொழில்’ நூல்வெளியீடும், பரிசளிப்பு நிகழ்வும் பாடசாலை அதிபர் வேலாயுதம் தினகரன் தலைமையில் 12.04. 2024 அன்று காலை 10.00 மணிக்கு கொட்டகலை -ரிஷிகேஷ் மண்டபத்தில் விமர்சியாக நடைபெற்றது.
நிகழ்வில் பிரதம அதிதியாக கல்வி இராஜாங்க அமைச்சர் அ.அரவிந்த குமார் அவர்கள் கலந்துகொண்டதோடு . சிறப்பு அதிதிகளாக கல்வி வெளியீட்டுத் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் திரு.எஸ் .முரளிதரன், நுவரெலிய கல்விவலயத்தின் கோட்டம் இரண்டின் கோட்டக் கல்விப் பணிப்பாளர் திரு.எஸ் . ஜெகதீஸ்வரன் அவர்களும் ஆசிரிய ஆலோசகர்களும் முன்னை நாள் அதிபர்களும் ,முன்னை நாள் ஆசிரியர்களும் ,பழைய மாணவர்களும், பெற்றோர்களும்கலந்து சிறப்பித்தார்கள்.
