பலாங்கொடை பிரதேசத்தில் கடந்து மூன்று மாதங்களில் மேற்கொள்ளப்பட்ட திடீர் மரண பரிசோதனையின் போது இருதய நோயால் உயிரிழப்போரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக பலாங்கொடை பிரதான வைத்திய சாலையின் தீடீர் மரண பரிசோதகர் (பத்மேன்திர விஜயதிலக்க ) தெரிவித்தார்.
இந்த விடயம் குறித்து அவர் மேலும் கூறுகையில்.
கடந்த மூன்று மாதங்களில் 30 தொடக்கம் 50 வயது வரை உயிரிழந்தோரில் 70% சதவீதமானோர் இருதய நோயால் உயிரிழந்துள்ளதாக தெரிவித்தார்.
விசேடமாக இளம் மற்றும் நடுத்தர வயதுடையோர் இருதய நோயால் உயிரிழப்பது அதிகரித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
30 வயதுக்கு மேற்பட்ட நபர் ஒருவருக்கு திடீரென வயிறு மற்றும் நெஞ்சி பகுதியில் எரிச்சல் தலை சுற்று போன்றவை ஏற்படும் சந்தர்பத்தில் உடனடியாக வைத்தியர் ஒருவரை சந்தித்து குருதி மற்றும் (ECG) பரிசோதனையை மேற்கொள்ளுமாறு திடீர் மரண பரிசோதகர் (பத்மேன்திர விஜயதிலக்க) தெரிவித்தார்.
இளம் மற்றும் நடுத்தர வயதுடையோருக்கு உடம்பில் இவ்வாறு திடீர் மாற்றங்கள் ஏற்படும் சந்தர்பத்தில்உரிய முறையில் வைத்திய அதிகாரிகளை சந்தித்து தேவையான பரிசோதனைகளை மேற்கொள்ளும் சந்தர்பத்தில் பல உயிர்களை காப்பாற்ற முடியும் என்று
பலாங்கொடை பிரதான வைத்திய சாலையின் தீடீர் மரண பரிசோதகர் பத்மேன்திர விஜயதிலக்க தெரிவித்தார்.
M.F.M.Ali
