பதுளை, மகியங்கன பிரதான வீதியில்புவக்ஹொடமுல்ல பகுதியில் இன்று (10) தெஹியத்துகண்டிய சிறிபுரவிலிருந்து பதுளை நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தும் பதுளையிலிருந்து ரிதிபான நோக்கி பயணித்த முச்சக்கர வண்டியும் ஒன்றுடன் ஒன்று மோதுண்டு விபத்துக்குள்ளாகியதில் ஆண் ஒருவர் உயரிழந்துள்ளதுடன் நால்வர் படுகாயமடைந்து பதுளை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப்பெற்று வருவதாக
பதுளை பொலிஸார் தெரிவித்தனர்.
காயமடைந்தவர்களில் மூன்று ஆண்களும் பெண்ணொருவரும் உள்ளடங்குகின்றனர்.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பதுளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
நடராஜா மலர்வேந்தன்
