கண்டி தெல்தோட்டை நூல்கந்தூர ஹேவாஹேட்ட நாராஹின்ன போன்ற பகுதியில் நேற்று இரவு முதல் கடுமையான மழை பெய்து வரும்நிலையில் நூல்கந்தூர மாணிக்க தோட்ட குடியிருப்பு பகுதியில் உள்ள வீட்டுக்கு மேல் பாரிய மரம் ஒன்று முறிந்து விழுந்துள்ளது.
இதனால் வீட்டு கூரை மற்றும் வீட்டில் சில பொருட்களும் சேதமாகியுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
