அவிசாவளை புவக்பிட்டிய பஹானகாவ கல்கந்த கிராமத்தில் ஏற்பட்ட மண்சார்வினால் குறித்த பிரதேசத்தில் இருந்து சுமார் 15 குடும்பங்கள் உடனடியாக அப்புறப்படுத்தி பாதுகாப்பான இடங்களுக்க்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சீதாவக்க பிரதேச செயலக செயலாளர் மற்றும் மத்தேகொட இராணுவ நிலையத்தின் இராணுவ அதிகாரிகளும், அவிசாவளை போலீஸ் அதிகாரிகளும் உடனடியாக அந்த பிரதேசத்தில் உள்ள மக்களை பாதுகாப்பாக அங்கிருந்து புவக்பிட்டிய கனிஷ்கா வித்யாலயத்துக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் குறித்து பிரதேசத்தில் இராணுவம் மற்றும் போலீசார் பாதுகாப்புக்காக பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
யூகேஷ்
