மஸ்கெலியா நகரில் உள்ள ஆலய வீதி பாரிய குன்றும் குழியுமாக காணப்படுவதாக மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
குறித்த வீதியூடாக பாடசாலை மாணவர்கள்,பயணிகள்,இந்து ஆலயத்திற்கு செல்லும் பக்தர்கள், பௌத்த மத விகாரை, இஸ்லாமிய பள்ளி, கிறித்தவ தேவாலயம்,அப் பகுதியில் உள்ள அனைத்து குடியிருப்பாளர்கள் பாரிய அளவில் சிரமத்திற்கு உள்ளாகி வருவதாக தெரிவிக்கின்றனர்.
பாடசாலை மாணவர்கள் சொல்லன்னா துயர் மத்தியில் குறித்த வீதியூடாக பாடசாலை செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இது குறித்து சம்பந்தப்பட்ட மஸ்கெலியா பிரதேச சபை நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றனர்.
