நோர்வூட் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட அயரபி தோட்டத்தில் இன்று மதியம் தேயிலைக் கொழுந்து பறித்துக் கொண்டிருந்த தொழிலாளர்கள் மீது குளவிகள் கலைந்து கொட்டியதில் 11 பேர் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இச் சம்பவம் இன்று மதியம் நோர்வூட் பொலிஸ் பிரிவில் உள்ள அயரபி தோட்டத்தில் இடம் பெற்று உள்ளது என நோர்வூட் பொலிசார் தெரிவித்தனர்.
இது குறித்து மேலும் கூறுகையில் பெண் தொழிலாளர்கள் தேயிலை கொழுந்து பறித்து கொண்டு இருந்த வேளையில் களைந்து கொட்டியதில் 11 பேர் குளவி கொட்டுக்கு இலக்கான நிலையில் டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்திய சாலையில் சிகிச்சைக்காக கொண்டு செல்ல பட்ட வேளையில் 35 வயது முதல் 45 வயதுக்கு இடைப்பட்ட 3 பெண்கள் வைத்தியசாலையில் தங்கி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
ஏனைய 8 பேர் வெளிநோயாளர் பகுதியில் சிகிச்சை பெற்று வெளியேறி உள்ளனர் என வைத்திய சாலையின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
மஸ்கெலியா தினகரன் விசேட நிருபர்.
