Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பாதுகாப்பான இடங்களைப் பெற்றுக்கொடுக்க ஜீவன் தொண்டமான் நடவடிக்கை!

August 10, 2026

கேகாலை பாடசாலையில் புலமைப்பரிசில் வினாத்தாள் தாமதம்: மாணவர்களுக்கு நீதி வழங்க இலங்கை ஆசிரியர் சங்கம் வலியுறுத்தல்!

August 10, 2026

மாளிகாவத்தை துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் பலி

August 10, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » வி.டி.தர்மலிங்கபுரம்’ – ஊருக்கு பேர் சூட்டும் நிகழ்வு..
மலையகம்

வி.டி.தர்மலிங்கபுரம்’ – ஊருக்கு பேர் சூட்டும் நிகழ்வு..

ThanaBy ThanaJune 14, 2024No Comments2 Mins Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

‘

நுவரெலியா மாவட்டம் வட்டகொட, மடகொம்பரை, புதுக்காடு பிரிவில்
இந்திய – இலங்கை அரசுகளின் இணைந்த அபிவிருத்தித் திட்டமாக நல்லாட்சி காலத்தில் (2015-2020) அமையப் பெற்ற ‘இந்திய வீடமைப்புத் திட்டத்துக்கு’ ,
மலையகக் கல்வியாளர்- அரசியலாளர்- கலைஞர் – மலையக அமைப்பாக்கவாதி,மடகொம்பரை (புதுக்காடு) மண்ணின் மைந்தன் அமரர்
வி.டி.தர்மலிங்கம் அவர்களின் நினைவாக ‘வி.டி.தர்மலிங்கபுரம்
(වී .ටී. ධර්ම ලිංග පුරම්V. T.DharmalingaPuram) என பெயர் சூட்டும் நிகழ்வு எதிர்வரும் ஞாயிறு 16.06.2024 அன்று பகல் 12 மணிக்கு நடைபெறவுள்ளது.

மடகொம்பரை புதுக்காடு தோட்டத்தில் பிறந்து ஒரு கல்வியாளராக உயர்ந்து தலவாக்கலை தமிழ் மகா வித்தியாலயத்தின் அதிபராக பணியாற்றிய , அரசியல் செயற்பாட்டாளராக மலையக மக்கள் முன்னணி யின் ஆரம்பகர்த்தாக்களில் ஒருவராக உபலைவராகத் திகழ்ந்த , கலைஞரும் எழுத்தாளருமான வி.டி.தர்மலிங்கம் அவர்களின் பெயரைச் சூட்டுவதற்கு
ஊர் மக்களால் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினரும் மலையக மக்கள் முன்னணியின் முன்னாள் செயலாளர் நாயகமும் இலக்கியவாதியுமான ‘சாகித்தியரத்ன’ மு.சிவலிங்கம் தலைமையில் இடம்பெறும் இந்த நிகழ்வுக்கு மடகொம்பரை மண்ணின் மைந்தர்களான முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரம் ( தலைவர் – தொழிலாளர் தேசிய சங்கம்), பாராளுமன்ற உறுப்பினர் மருதபாண்டி இராமேஸ்வரன் ( தவிசாளர் – இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ்) ஆகியோர் சிறப்பு அதிதிகளாக அழைக்கப்பட்டுள்ளனர். முன்னாள் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மடகொம்பரை மண்ணின் மைந்தருமான மயில்வாகனம் திலகராஜா ( தலைமை ஒருங்கிணைப்பாளர் – மலையக அரசியல் அரங்கம்) ஊர் மக்களோடு இணைந்து இந்த நிகழ்வை ஏற்பாடு செய்துள்ளார். இவரது பதவிக் காலத்திலேயே இந்தத் வீடமைப்புத் திட்டம் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

கூடவே வி.டி.தர்மலிங்கம் அவர்கள் மத்திய மாகாண சபை உறுப்பினராக இருந்த காலத்தில் (1995) அவரது நிதி ஒதுக்கீட்டில் அமைக்கப்பட்ட ‘V.T தர்மலிங்கம் நூலகத்தை’ யும் புனரமைப்பு செய்யவும் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இந்த நற்பணிகளில் ஆர்வம் உள்ளோரின் பங்களிப்புகளை மனமுவந்து ஏற்றுக் கொள்ளத் தயாராக உள்ளோம் என ஏற்பாட்டுக்குழு அறிவித்துள்ளது.

இதே மடகொம்பரைத் தோட்டத்தில் இருந்து இலங்கையின் முதலாவது பாராளுமன்றத்தை (1947-1952) சி.வி. வேலுப்பிள்ளை அவர்களும் இடைப்பட்ட காலத்தில் (1988 & 2005) எம்.எஸ்.செல்லச்சாமி அவர்களும் இலங்கைப் பாராளுமன்ற உறுப்பினர்களாக செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பாதுகாப்பான இடங்களைப் பெற்றுக்கொடுக்க ஜீவன் தொண்டமான் நடவடிக்கை!

    August 10, 2026

    கிராம உத்தியோகத்தர்களின் பணிப்புறக்கணிப்பு: பயணக் கொடுப்பனவு தாமதத்தால் இன்றும் நாளையும் சேவை பாதிப்பு

    August 10, 2026

    2026 க.பொ.த உயர்தரப் பரீட்சை இன்று ஆரம்பம்: மாணவர்களுக்கான விசேட அறிவிப்புகள்

    August 10, 2026

    மதங்களின் பெயரால் மக்கள் மத்தியில் முரண்பாடுகளை ஏற்படுத்வகையிலான செயற்பாடுகளை தொடர்ந்து அனுமதிப்பது நாட்டுக்கு நன்மையான விடயமாக இருக்காது.

    August 9, 2026
    Editors Picks

    அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பாதுகாப்பான இடங்களைப் பெற்றுக்கொடுக்க ஜீவன் தொண்டமான் நடவடிக்கை!

    August 10, 2026

    கேகாலை பாடசாலையில் புலமைப்பரிசில் வினாத்தாள் தாமதம்: மாணவர்களுக்கு நீதி வழங்க இலங்கை ஆசிரியர் சங்கம் வலியுறுத்தல்!

    August 10, 2026

    மாளிகாவத்தை துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் பலி

    August 10, 2026

    ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சட்டத்தரணி சாகர காரியவசம் கைது செய்யப்பட்டுள்ளார். 

    August 10, 2026

    அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பாதுகாப்பான இடங்களைப் பெற்றுக்கொடுக்க ஜீவன் தொண்டமான் நடவடிக்கை!

    August 10, 2026

    கேகாலை பாடசாலையில் புலமைப்பரிசில் வினாத்தாள் தாமதம்: மாணவர்களுக்கு நீதி வழங்க இலங்கை ஆசிரியர் சங்கம் வலியுறுத்தல்!

    August 10, 2026

    மாளிகாவத்தை துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் பலி

    August 10, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.