நேற்று கொழும்பு கோட்டை அதிபர் – ஆசிரியர்களின் போராட்டத்தின் மீது தாக்குதல் நடத்தியமைக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் இன்று தலவாக்கலை பஸ் தரிப்பிடத்தின் அருகில் எதிர்ப்பு நடவடிக்கை ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
குறித்த எதிர்ப்பு நடவடிக்கையில் அதிபர் ,ஆசிரியர்கள் என பலரும் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் பதாகைகள் ஏந்தியாறு கோஷம் எழுப்பி தமது எதிர்ப்பை வெளிக்காட்டினர்.
கல்விசமூகத்தின் மீது அடக்கு முறையை பிரயோகிக்காதே. எமது உரிமையை கேட்பது அரசி டமா IMF இடமா?
அதிபர் ஆசிரியர் மீது வன்முறையை பிரயோகிக்காதே.பாதுகாப்பை உறுதிப்படுத்து,போன்ற கோஷங்கள் இதன் போது எழுப்பப்பட்டன.












