நோர்வூட்டில் இருந்து ஹட்டன் நோக்கி பயணித்த கார் வீதியை விட்டு விலகி சிற்றோடையில் கவிழ்ந்ததில் காரில் பயணித்த பெண் ஒருவரும் மற்றுமொருவரும் காயமடைந்து டிக்கோயா ஆரம்ப வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த விபத்து நேற்று (29) மாலை 04 மணியளவில் ஹட்டன் நோர்வூட் பிரதான வீதியில் நோர்வூட் தியசிறிகம பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
விபத்து தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட நோர்வூட் பொலிஸார், புதிய சாரதி அனுமதிப்பத்திரம் பெற்ற பெண்ணொருவரே குறித்த காரை ஓட்டிச் சென்றுள்ளதாக தெரிவித்தனர்.
விபத்தில் கார் பாரியளவில் சேதமடைந்துள்ளதுடன், விபத்து தொடர்பில் நோர்வூட் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மஸ்கெலியா நிருபர்.