கிழக்கு மாகாண உள்ளூராட்சி மன்றங்களில் 10 வருடங்களுக்கு மேலாக தற்காலிக நியமனத்தில் பணிபுரிந்து வரும் ஊழியர்கள் நிரந்தர நியமனங்களை பெற்று கொள்வது குறித்து கடந்த கால ஆளுநர்கள் மற்றும் பல்வேறு தரப்பினர்களிடம் கோரிக்கைகளை வைக்கப்பட்டன . தற்போது சம்பந்தப்பட்ட ஊழியர்கள் தங்களது நிரந்தர நியமனம் குறித்தும், நிரந்தர நியமனம் இல்லாததால் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்தும் கிழக்கு மாகாண ஆளுநரும் இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவருமான செந்தில் தொண்டமானின் கவனத்திற்கு கொண்டு வந்ததை அடுத்து
ஆளுநர் செந்தில் தொண்டமான் இவ்விடயம் குறித்து ஜனாதிபதி, பிரதமரின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய தீர்வினைப் பெற்று தருவதாக உறுதியளித்திருந்த நிலையில் தற்போது ஆளுநர் செந்தில் தொண்டமானால் உரிய ஆவணங்கள் தயாரிக்கப்பட்டு 1,350 இற்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கு ஒரே நாளில் நிரந்தர நியமனங்கள் வழங்கி வைக்கப்பட்டது. அதில் முதல் கட்டமாக அம்பாறை மாவட்டத்தை சேர்ந்தவர்களுக்கு நியமனங்கள் வழங்கி வைக்கப்பட்டது.
