இன்று (19) காலை மோட்டார் சைக்கிள் ஒன்றும் அம்புலன்ஸ் வாகனமும் நேருக்கு நேர் மோதியதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த பாணந்துறை பிரதேசத்தைச் சேர்ந்த 22 வயதுடைய இளைஞன் ஒருவன் உயிரிழந்துள்ளான்.
காலி – கொழும்பு வீதியில் தருன சேவா மாவத்தை அருகே, காலியில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த பலபிட்டிய வைத்தியசாலைக்கு சொந்தமான அம்பியுலன்ஸ் வாகனம் எதிர்திசையில் பயணித்த மோட்டார் சைக்கிளுடன் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
