ஊவா பரணகம, உமா எல பிரதேசத்திலுள்ள டயர் களஞ்சியசாலையில் இன்று (22) பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக அம்பகஸ்தோவ பொலிஸார் தெரிவித்தனர். மூடப்பட்ட டயர் களஞ்சியசாலையில் தீ பரவியதை அடுத்து பண்டாரவளை மாநகர சபையின் தீயணைப்பு பிரிவினர், அம்பகஸ்தோவ பொலிஸார் மற்றும் ஊவா பரணகம பிரதேச செயலகம் இணைந்து தீ பரவலை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தீ விபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில், மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் எனவும் தீ பரவியதால் டயர் களஞ்சியசாலையில் இருந்த பெரும்பாலான டயர்கள் சேதமடைந்துள்ளதாக வும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை அம்பகஸ்தோவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
