பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் பயணித்த கார் நேற்று (27) மாலை மோட்டார் சைக்கிள் ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளக்கியுள்ளது .
கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த போது கிளிநொச்சி 155 கிலோ மீற்றர் தூண் பகுதியில் மோட்டார் சைக்கிளுடன் மோதியுள்ளதுடன் இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படாத நிலையில், எம்.பி.யின் வாகனத்தின் முன்பகுதி சிறிதளவு சேதமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
