மாலம்பே – ஹோகந்தர பகுதியில் வேகக் கட்டுப்பாட்டை இழந்த முச்சக்கரவண்டி ஒன்று பேருந்து தரிப்பிடத்தில் நின்றுகொண்டிருந்த வயோதிபப் பெண் ஒருவர் மீது மோதியதில் வயோதிபப் பெண் உயிரிழந்துள்ளார்.
விபத்தில் படுகாயமடைந்த பெண் ஹோமாகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.ம்பவம் தொடர்பில் முச்சக்கரவண்டியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.
