கடந்த இரண்டு வருடங்களுடன் ஒப்பிடுகையில், 2024 ம் ஆண்டில், வனவளத் திணைக்களத்தின் கட்டுப்பாட்டில் உள்ள சுற்றுலாத் தலங்களுக்கு வருகை தந்த உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் rபயணிகளின் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக வனஜீவராசிகள், வன வளங்கள் மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்தார்.
2024 ஆம் ஆண்டின் முதல் 6 மாதங்களில் 364,521 சுற்றுலாப் பயணிகள் வந்துள்ளதாகவும் அவர்களில் 40% வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று (28) நடைபெற்ற 2 வருட முன்னேற்றம் தொடர்பான செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே வனஜீவராசிகள், வன வளங்கள் பாதுகாப்பு மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி இதனைக் குறிப்பிட்டுள்ளார்