ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மூன்றாகப் பிரிவடைந்துள்ளது. இந்தக் கட்சி உறுப்பினர்கள் மூன்றாகப் பிளவுபட்டு, மூன்று ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு ஆதரவு வழங்கவுள்ளதாக தெரிவிக்கப்படுள்ளது .
இதன்படி, முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையிலான குழு, நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷவிற்கு ஆதரவு வழங்குவதாகவும் அத்துடன் நிமல் சிறிபால டி சில்வா, மஹிந்த அமரவீர ஆகியோர் தலைமையிலான குழு, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவு வழங்கவுள்ளதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர, ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவிற்கு ஆதரவு வழங்குவந்தாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் தீர்மானம் மேற்கொள்வதற்காக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையிலான புதிய கூட்டணி கூடி எதிர்வரும் 31ம் திகதி தீர்மானிக்கும் என விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சரும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உபதலைவருமான மஹிந்த அமரவீர முன்னதாக தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.