ஹங்வெல்ல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புவக்பிட்டிய தும்மோதர வீதி மிரிஸ்குடு வாங்குவ பிரதேசத்தில் தும்மோதரயிலிருந்து புவக்பிட்டிய பிரதேசத்தை நோக்கி சென்று கொண்டிருந்த சிமெண்ட் ஏற்றிய கனரக டிப்பர் வண்டி ஒன்று மோட்டார் சைக்கிளுடன் மோதி ஆற்றில் பிரண்டு விபத்துக்குள்ளாகியுள்ளன
சம்பவத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த ஹங்வெல்ல பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய பொலிஸ் அதிகாரி ஒருவர் மரணம் அடைந்துள்ளார்.
மோட்டார் சைக்கிளின் பின்னால் பயணித்த பொலிஸ் அதிகாரி படுகாயங்களுடன் அவிசாவெல்ல ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சிமெண்ட் கொண்டு சென்ற டிப்பர் வண்டியின் ஓட்டுனர் மற்றும் டிப்பர் வண்டியின் உதவியாளர் படுகாயங்களுடன் அவிசாவலை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் மரணமடைந்த பொலிஸ் அதிகாரி குருணைகளை பிரதேசத்தை சேர்ந்தவர் என தெரிவித்ததுடன் மேலதிக விசாரணைகள் ஹங்வெல்ல பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
