இன்று நள்ளிரவு மாதாந்த எரிபொருள் விலை திருத்தம் இடம்பெறாது என வெளியாகியுள்ள செய்திகள் உண்மைக்குப் புறம்பானது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை கனியவளக் கூட்டுத்தாபனத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவரிடம் எமது செய்திச் சேவை வினவியபோது அவர் இதனைத் தெரிவித்தார்.
இதன்படி மாதாந்த எரிபொருள் விலைத் திருத்தம் வழமை போன்று மேற்கொள்ளப்படும் என அவர் குறிப்பிட்டார்.
அதேநேரம் நாட்டின் எந்த பிரதேசத்திலும் தற்போது எரிபொருளுக்கான தட்டுப்பாடு ஏற்படவில்லை எனவும் இலங்கை கனியவளக் கூட்டுத்தாபனத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார்