வி.தீபன்ராஜ்
தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தலவாக்கலை தோட்டத்தில் தோட்ட தொழிலாளரை தாக்கிய தோட்ட முகாமையாளர் கைதுசெய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இச்சம்பவம் நேற்றைய முன்தினம் (30)இடம்பெற்றுள்ளது கொழுந்து நெருகையில் தொழிலாளர் செய்த தவறின் காரணமாக தோட்ட முகாமையாளர் தோட்டத் தொழிலாளரை தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது அதனை தொடர்ந்து நேற்றைய தினம் (31)தலவாக்கலை பொலிஸார் தோட்ட முகாமையாளரை கைது கைது செய்ததோடு இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்டுகின்றது.
