ஹல்தமுல்ல பிரதேசத்திற்குற்பட்ட மாக்காந்த 155 ( என் ) கிராம சேவகப்பிரிவைச் சேர்ந்த ஆர்னோல் மற்றும் மாக்காந்த பகுதிகளில் நேற்றிரவு (07) காட்டு யானைகளின் தாக்குதலால் பெட்டிக்கடையொன்று சேதமடைந்துள்ளது.
கடந்த ஒரு வார காலப்பகுதியில் இரவு வேளைகளின்போது மூன்று தடவைகளில் காட்டுயானைகளின் தாக்குதல்களால் இரு குடியிருப்புகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.
இதேவேளை பகல் வேளைகளிலும் யானைகளின் நடமாட்டம் காணப்படுவதால் இப்பகுதி மக்கள் அச்சத்திற்குள்ளாகியுள்ளனர்.
கடந்த காலங்களில் பூனாகல, மாக்காந்த பகுதிகளில் யானைகளின் தாக்குதலால் மனித உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. இதனால் காட்டு யானைகளின் அச்சுறுத்தல் நிலவுகின்ற இப்பகுதிகளில் யானைகளின் நடமாட்டத்தைக்கட்டுப்படுத்துவதற்கு உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்குமாறு இப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.
நடராஜா மலர்வேந்தன்
