Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

வரலாற்று சாதனை! இங்கிலாந்தை வீழ்த்தி 430 ஓட்டங்களை இலக்காகக் கொண்டு திகைப்பூட்டும் வெற்றி பெற்றது இலங்கை!

October 22, 2026

கொழும்பு – விஹாரமஹாதேவி பூங்காவில் பௌத்த பிக்குகள் சத்தியாகிரகம்: பொலிஸாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே அமைதியின்மை!

October 22, 2026

அனைத்து மோட்டார் சைக்கிள்களையும் பதிவு செய்வது கட்டாயம்: மோட்டார் போக்குவரத்து திணைக்களம் எச்சரிக்கை!

October 22, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » மழையுடனான வானிலை இன்றும் தொடரக்கூடும்
கோவில்

மழையுடனான வானிலை இன்றும் தொடரக்கூடும்

ThanaBy ThanaAugust 17, 2024No Comments2 Mins Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

 

 

இலங்கைக்கு மேலாக வளிமண்டலத்தின் கீழ் மட்டத்தில் தென்படுகின்ற இடையூரின் காரணமாக நாட்டின் தென்மேற்குப் பிராந்தியத்தில் நிலவுகின்ற மழையுடனான வானிலை இன்றும் தொடரக்கூடும்.

 

சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் கண்டி, நுவரெலியா, காலி, மாத்தறை மற்றும் மன்னார் மாவட்டங்களிலும் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

 

சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில இடங்களிலும் 100 mm இலும் கூடிய பலத்த மழை பெய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

நாட்டின் ஏனைய பிரதேசங்களின் பல இடங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய வாய்ப்புக் காணப்படுகிறது.

 

பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடிய சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

 

கடல் பிராந்தியங்களில்

****************************

 

மன்னார் தொடக்கம் புத்தளம், கொழும்பு ,காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கரையோரத்திற்கு அப்பால் உள்ள கடல் பிராந்தியங்களில் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

 

நாட்டை சூழ உள்ள ஏனைய கடல் பிராந்தியங்களின் சில இடங்களில் பிற்பகல் அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

 

கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 30 – 40 km வேகத்தில் தென்மேற்குத் திசையில் இருந்து காற்று வீசும்.

 

காங்கேசன்துறை தொடக்கம் மன்னார் ஊடாக புத்தளம் வரையான அத்துடன் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 60 km இயலும் கூடிய வேகத்தில் அடிக்கடி காற்று அதிகரித்து வீசக்கூடும்.இவ்வாறான சந்தர்ப்பங்களில் இக் கடல் பிராந்தியங்கள் கொந்தளிப்பாகக் காணப்படும்.

 

புத்தளம் தொடக்கம் கொழும்பு, காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 50 – 55 km இலும் கூடிய வேகத்தில் அடிக்கடி காற்று அதிகரித்து வீசக்கூடும் இவ்வாறான சந்தர்ப்பங்களில் இக் கடல் பிராந்தியங்கள் ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படும்.

 

ஆனால் இடியுடன் கூடிய மழை பெய்கின்ற சந்தர்ப்பங்களில் பலத்த காற்று வீசுவதுடன் அவ்வேளைகளில் கடல் பிராந்தியங்கள் தற்காலிகமாக மிகவும் கொந்தளிப்பான நிலையில் காணப்படும்.

 

 

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    இறக்குவானையில் மாபெரும் விநாயக சதுர்த்தி பெருவிழா* 

    September 17, 2026

    கண்டி – பன்விலை பகுதியில் உள்ள ஆறு ஆலயங்களில் பல இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்கள் திட்டமிட்ட குழுவினரால் ஒரே இரவில் திருடப்பட்டுள்ளன.

    September 8, 2026

    கலஹா – கீழாத்தோட்டம் பகுதியில் ஆலய உண்டியல், வேல் மற்றும் வியாபார நிலையம் என்பனவற்றில் நதிரிவுத் திருட்டு!

    August 2, 2026

    திருமுறைநெறிச் செல்வர்ப் பட்டய கற்கை நெறி விண்ணப்பம் கோரல்-திருக்கயிலாயப் பரம்பரை, மெய்க்கண்ட சந்தானம்

    July 26, 2026
    Editors Picks

    வரலாற்று சாதனை! இங்கிலாந்தை வீழ்த்தி 430 ஓட்டங்களை இலக்காகக் கொண்டு திகைப்பூட்டும் வெற்றி பெற்றது இலங்கை!

    October 22, 2026

    கொழும்பு – விஹாரமஹாதேவி பூங்காவில் பௌத்த பிக்குகள் சத்தியாகிரகம்: பொலிஸாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே அமைதியின்மை!

    October 22, 2026

    அனைத்து மோட்டார் சைக்கிள்களையும் பதிவு செய்வது கட்டாயம்: மோட்டார் போக்குவரத்து திணைக்களம் எச்சரிக்கை!

    October 22, 2026

    நாட்டின் பல பகுதிகளுக்கு மின்னல் தாக்கம் குறித்த எச்சரிக்கை!

    October 22, 2026

    வரலாற்று சாதனை! இங்கிலாந்தை வீழ்த்தி 430 ஓட்டங்களை இலக்காகக் கொண்டு திகைப்பூட்டும் வெற்றி பெற்றது இலங்கை!

    October 22, 2026

    கொழும்பு – விஹாரமஹாதேவி பூங்காவில் பௌத்த பிக்குகள் சத்தியாகிரகம்: பொலிஸாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே அமைதியின்மை!

    October 22, 2026

    அனைத்து மோட்டார் சைக்கிள்களையும் பதிவு செய்வது கட்டாயம்: மோட்டார் போக்குவரத்து திணைக்களம் எச்சரிக்கை!

    October 22, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.