குளவி கொட்டுக்கு இலக்காகிய நிலையில் ஏழு தொழிலாளர்கள் மஸ்கெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
குறித்த சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது.
மஸ்கெலியா பொலிஸ் பிரிவில் உள்ள மவுசாக்கலை தோட்ட சீர்பாதம் பிரிவில் தேயிலை தோட்டத்தில் வேலை செய்து கொண்டு இருந்த வேலையில் குளவி கொட்டுக்கு இலக்காகிய நிலையில் மஸ்கெலியா மாவட்ட வைத்திய சாலையில் அனுமதிக்க பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இவ்வாறு குளவி கொட்டுக்கு இலக்கிய ஏழு தொழிலாளர்களும் ஆண்கள் என மஸ்கெலியா மாவட்ட வைத்திய அதிகாரி தெரிவித்தார்.
இவர்கள் எழு பேரும் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மஸ்கெலியா நிருபர்.
