இன்றைய சூழலில் விவசாயிகள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றார்கள் இதனை தீர்க்கும் நோக்கத்துடன் நுவரெலியா மாவட்டத்தில் விவசாய நடவடிக்கைகளை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் இலங்கையில் உள்ள முன்னணி வங்கிகளின் ஒன்றான ஹட்டன் நஷனல் வங்கியில் ஏற்பாட்டில் நுவரெலியா மாநகர சபை (சினிசிட்டா) மண்டபத்தில் (23) புதன்கிழமை விழிப்புணர்வு செயற்திட்டமொன்று நடைபெற்றது. இதில் நுவரெலியா மாவட்டத்தில் சுற்றுவட்டாரத்திலுள்ள பிரதேசங்களில் இருந்து விவசாயத்தினை மேற்கொள்ளும் சுமார் 1500 இற்கும் மேற்பட்ட மக்கள் வருகை தந்தனர்.
குறித்த நிகழ்ச்சியில் உயர் ரக விவசாய உபகரணங்களை எவ்வாறு பயன்படுத்துவது தொடர்பிலும், விவசாயிகளை விவசாயம் செய்வதை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு வகையான பயிர்கள் குறித்த விழிப்புணர்வு குறுந்தகடுகள் மற்றும் துண்டுப் பிரசுரங்கள் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டன.
அத்துடன் நடுகை விதைகளும் அதன் வகைகள், நடுகை மற்றும் பராமரித்தல் பற்றியும் விளக்கமளிக்கப்பட்டது. அதுமட்டுமன்றி தொற்றுநீக்கல் மற்றும் கூட்டெரு தயாரிக்கும் முறைகள் என்பவற்றை செய்முறை மூலம் விளக்கமளிக்கப்பட்டது.
இதனைத்தொடர்ந்து விவசாயம் சம்மந்தமான கலந்துரையாடலும் சந்தேகங்கள் மற்றும் விவசாயம் சார்ந்த பிரச்சினைகளை கேட்டறிந்து அதற்கான தீர்வுகளும் வழங்கப்பட்டது.
டி .சந்ரு
