பசறை நகரில் மோட்டார் சைக்கிள் ஒன்றும் லொறி ஒன்றும் விபத்துக்குள்ளாகி உள்ளதாக பசறை பொலிஸார் தெரிவித்தனர்.
பதுளையில் இருந்து மதுபான போத்தல்களை ஏற்றிக் கொண்டு புத்தலை பகுதிக்கு சென்று கொண்டிருந்த லொறி ஒன்றும் பசறை பிரபல பாடசாலை ஒன்றில் தனது சகோதரியை இறக்கிவிட்டு பதுளை நோக்கி சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் ஒன்றும் பசறை நகரில் மோதி விதிக்குள்ளாகியுள்ளதாக பசறை பொலிஸார் தெரிவித்தனர்.
இதன் போது பசறை பசறை டிவிசன் பகுதியை சேர்ந்த மோட்டார் சைக்கிளின் சாரதி சிறு காயங்களுக்கு உள்ளாகி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலதிக விசாரணைகளை பசறை பொலகஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
