.
15 வயது பாடசாலை மாணவி துஸ்பிரயோகம் தொடர்பில் 52 வயது நபர் ஒருவரை கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் நல்லதண்ணி பொலிஸ் பிரிவில் இடம் பெற்றுள்ளது.
இது குறித்து நல்லதண்ணி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சி.ஜ.வீரசேகர கூறுகையில் நேற்று முன்தினம் (28 /11/2024)பாதிக்கப்பட்ட மாணவியின் புகாரைத் தொடர்ந்து சந்தேக நபர் கைது செய்யப்பட்டு விசாரணையின் பின்னர் ஹட்டன் நீதிமன்றத்தில் கடந்த 28 ம் திகதி ஆஜர் படுத்த பட்ட போது 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு ஹட்டன் நீதிமன்ற நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இது குறித்து நல்லதண்ணி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மேலும் கூறுகையில் சந்தேக நபர் நல்லதண்ணி தோட்டத்தை சேர்ந்தவர் எனவும் அவருக்கு மேலும் ஒரு வீடு லக்சபான தோட்ட முள்ளு காமம் கீழ் பிரிவில் உள்ளது எனவும் அங்கு சென்று வருகையில் பாதிக்கப்பட்ட மாணவியின் தாயாருடன் இருந்த தொடர்பினால் இந்த சம்பம் இடம்பெற்றுள்ளது என அவர் தெரிவித்தார்.
பாதிக்கப்பட்ட மாணவி டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்திய சாலையில் அனுமதிக்க பட்டு சிகிச்சை பெற்று வருவதாக பொறுப்பதிகாரி சி.ஜ.வீரசேகர தெரிவித்தார்.
மஸ்கெலியா நிருபர்
