பண்டாரவளை அம்பிட்டிகந்த தோட்ட அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் அறநெறி பாடசாலை இன்று(04/02/2022) அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது.

அம்பிட்டிகந்த திரு.திருமதி வீரையா ஜீவானந்தன் – முத்து ஜெயசுதா தம்பதியினர் தலைமையில் அறநெறி பாடசாலையை ஆரம்பித்து வைத்தனர். ஆரம்ப நிகழ்வில் அம்பிட்டிகந்த தமிழ் வித்தியாலய அதிபர் ராஜாஜி, ஆசிரியர்கள் ராஜேந்திரன், நடராஜா புவனேஸ்வரன், ரேணுகா மற்றும் ஆலய அறங்காவலர் சபை தலைவர் அசோக்குமார், மோகனசுந்தரம், அறநெறி ஆசிரியை கலைச்செல்வி, மாணவர்கள் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

இறைவழிபாடோடு ஆரம்பமாகியதை தொடர்ந்து பண்டாரவளை தமிழ் மத்திய கல்லூரி மாணவிகள் ஜீ.அபிலாஷினி, ரீ.பிரதிவிகா ஆகியோரின் வரவேற்பு நடனம், ஆன்மீக சொற்பொழிவுகள் என்பன நடைபெற்றன. அத்தோடு மாணவர்கள் அனைவருக்கும் கற்றல் உபகரணங்களும் ஸ்ரீதரன் அவர்களால் வழங்கி வைக்கப்பட்டன.

நடராஜா மலர்வேந்தன்
