Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

பிரிடோவின் புதிய முயற்சி-அக்கரப்பத்தனை பிரதேசத்தில் தோட்ட மக்களுக்கு முகவரி பெற்றுக்கொடுக்கும் வேலைத்திட்டம் ஆரம்பம்

August 31, 2026

பெற்றோலின் விலை குறைக்கப்பட்டது

August 30, 2026

தலவாக்கலை ட்ரூப் பாதை அபிவிருத்தி வேலைத்திட்டம் இன்று அடிக்கல் நாட்டி ஆரம்பித்து வைக்கப்பட்டது. 

August 30, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » பாடசாலைகளில் பதில் அதிபர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் தொடர்பில் அகில இலங்கை பதில் அதிபர்கள சங்கம் பிரதமருக்கு கடிதம்
இலங்கை

பாடசாலைகளில் பதில் அதிபர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் தொடர்பில் அகில இலங்கை பதில் அதிபர்கள சங்கம் பிரதமருக்கு கடிதம்

ThanaBy ThanaJanuary 7, 2025Updated:January 7, 2025No Comments4 Mins Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

1. இலங்கையின் கல்வித்துறை வளர்ச்சியில் பாடசாலைகளில் ‘கடமை நிமித்தம் கடமை
நிறைவேற்று அதிபர்கள்’ என்ற சொற்றொடரில் பதில் அதிபர்கள் மிக முக்கிய பங்களிப்பு
செய்து வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. மதிப்புமிகு சீ.டபள்யூ.டபள்யூ கன்னங்கர அவர்களின்
பின்னரான கல்வி முறையில் பாடசாலைகளை தாங்கிப்பிடித்து வந்துள்ளவர்களாக இந்த பதில்அதிபர்களே காணப்படுகிறார்கள்.

இவ் பதில் அதிபர்களாக கடமையாற்றியவர்களே
பெரும்பாலும் இலங்கை அதிபர் சேவைத் தரத்திற்குள் உள்வாங்கப்பட்டார்கள். அவர்களில்
பலர் அதிபர் தரம் 1. 2 ஆகியவற்றிலும், கல்வி நிர்வாக சேவையிலும் உயர்வு
பெற்றவர்களாகவும் பதவியில் இருக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது. பலர் ஓய்வு பெற்றுள்ள
நிலையில் அவர்களுடைய சேவை குறித்த அவதானத்திலும் பதில் அதிபர்கள் என்ற
நிலையில் இருந்தே நோக்கப்பட வேண்டியுள்ளது. 1815ஃ 31 இலக்க 22.10.2014 ஆம் திகதிய
இலங்கை அதிபர் சேவை பிரமான குறிப்பு நடைமுறையிலுள்ள நிலையிலும் இன்று வரையில்
இலங்கையிலுள்ள கல்வி அமைச்சின் கீழ் இயங்கும் அரச பாடசாலைகளில் மூன்றிலொரு
பாடசாலைகள் பதில் அதிபர்களின் நிர்வாகத்தின் கீழே இயங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையின் கல்வித்துறையில் தவிர்க்க முடியாத அங்கமாகவே பதில் அதிபர்கள்
திகழ்கிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. கல்வி அமைச்சின் பாடசாலைகள்
வகைப்படுத்துலுக்கு அமைவாக உள்ள கஸ்டப் பிரதேச, அதிகஸ்டப் பிரதேச
பாடசாலைகளின் நிர்வாகத்துக்கு பொறுப்பாகவே இவ் பதில் அதிபர்கள் சேவையில்
உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

பதில் அதிபர்கள் இல்லாவிட்டால் பல பாடசாலைகள்
மூடப்பட்டிருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது. மிக சவாலான சூழ் நிலையில் இவ்வாறான
பாடசாலைகளை காப்பாற்றி வருபவர்கள் பதில் அதிபர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. பதில்
அதிபர்களின் அர்ப்பணிப்புமிக்க சேவையை மதித்தும், அவர்கள் கல்வி புலத்தில் வைத்துள்ள
நம்பிக்கையை மதிக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டியது காலத்தின்
தேவையாகும். அனர்த்த முகாமை என்ற எண்ணக்கரு வளர்ந்துள்ள நிலையில் அவ்வாறான
யதார்த்தங்களை பின்பற்றி இலங்கை அதிபர் சேவை பிரமான குறிப்பில் மாற்றம்
கொண்டுவரப்படல் வேண்டும்.

தற்போதுள்ள அதிபர் பிரமானக்குறிப்பு பல காலங்கள்
சேவையை வழங்கிய பதில் அதிபர்கள் பாதிக்கப்படுவதாக அமைகிறது. எனவே இப் பாதிப்பு
நிலையை உணர்ந்து கொள்கை வகுப்பாளர்கள், தொழிற்சங்கங்கள் தீர்மானத்திற்கு வருதல்
வேண்டும்;. இவ்வாறு மேற்கொள்ளப்படும் திருத்தங்கள் ஊடாக பதில் அதிபர்களின்
சேவைகளுக்கு மதிப்பளிக்கும் விடயங்களும் உள்ளீர்க்கப்படல் வேண்டும்.

 

2. 180 நாட்கள் கடமையில் இருந்தால் பதவி விலக்க முடியாது என்ற நியமமும், இவ் விடயம்
தொடர்பில் பொதுச்சேவை ஆனைக்குழுவின் சிபாரிசும் கவனத்தில் எடுக்கப்படல் வேண்டும்.

3. மேற்குறித்த பிரமானக்குறிப்பிற்கமைய பரீட்சை மூலமே இவ் வெற்;றிடங்கள் நிரப்பப்படல்
வேண்டுமானால் பரீட்சைகள் நடாத்தியிருக்க வேண்டும். பரீட்சையில் பங்கேற்கும் வாய்ப்பபை
வழங்கியிறுக்க வேண்டும். மாறாக 2019ம் வருடம் தெரிவு செய்யப்படாமல் பரீட்சையில் சித்தி
பெறத்தவரியவர்களைக் கொண்டு வாய்ப்பை வழங்க எடுக்கும் முயற்சியும் பிரமானக்
குறிப்பிற்கு முரணானதே. இனிவரும் காலங்களிலும் இப் பரீட்சை பெறுபேறுகளின்
அடிப்படையிலா அதிபர் சேவைத்தரத்திற்கு உள்வாங்கப்படுவார்கள்?

5. சுற்று நிருப இலக்கம் 16/20172017 படி பெப்ரவரி 07 ஆம் திகதியுடைய
அமை.ப/17/0105/742/002 இலக்கம் கொண்ட அமைச்சரவை தீர்மானத்திலிருந்து கிடைத்த
அனுமதியின் பிரகாரம் அதிகரித் விசேட கொடுப்பனவு திருத்தம் செய்யப்பட்டு
வழங்கப்படுகிறது. ‘ மேற்படி திருத்தம் செய்யப்பட்ட கொடுப்பனவு கொடுப்பனவு, அதிபர்களாக
சேவையாற்றுகின்ற மற்றும் அப்பதவிகளில் சேவையாற்றுகின்ற உத்தியோகத்தர்களுக்காக
வழங்கப்படுவதோடு அதனை 2017 மார்ச் மாதம் முதலாந் திகதி முதல் வழங்க நடவடிக்கை
மேற்கொள்ளல் வேண்டும்.’ என்ற விடயம் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளமை
குறிப்பிடத்தக்கது. இக் கொடுப்பனவு மத்திய மாகாணம், கிழக்கு மாகாணம் தவிர்ந்த ஏனைய
மாகாணங்களில் வழங்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. மாறாக மத்திய மாகாணம், கிழக்கு
மாகாணங்களில் இக் கொடுப்பனவு வழங்கப்படவில்லை என்பதும் அதிபர்களுக்கான
கொடுப்பனவாக வழங்கப்பட்ட ரூபாய் 300/ஸ்ரீ இடைநிறுத்தப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது. இக்
கொடுப்பனவு நிலுவைத் தொகையுடன் ;வழங்கப்படல் வேண்டும்.

6.அவி21/0320/308/016 இலக்க மற்றும் 2021.03.01ஆம் திகதிய அமைச்சரவை
தீர்மானத்திற்கு அமைய இலங்கை அதிபர் சேவையில் தரம் 111 இற்கு ஆடசேர்ப்பு
செய்தல் – 2021/2022 ற்கு அமைய கோரப்பட்ட விண்ணப்பங்கள் தொடர்பில் எதுவித பதிலும்
கிடைக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. இத் தீர்மானத்திற்கு அமைவாக பதில்
அதிபர்களின் சேவையை மதிக்கும் வகையில் தீர்மானங்கள் மேற்கொள்ளப்படல் வேண்டும்.

 

7. தர அதிபர்களுக்கு சமனான வகையில் பாடசாலைகளில் பணிகளை முன்னெடுப்பதோடு. அரச,
அரச நிறுவன தொடர்பான பணிகளில் பதில் அதிபர்களின் பணிகளும் திருப்திகரமாக
ஏற்றுக்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது. வங்கிகள், தேர்தல் திணைக்களம், பரீட்சை
திணைக்களம், ஆட்பதிவுத்திணைக்களம் போன்ற அரச நிறுவனங்களில் எமது பதவி நிலை
அங்கீகரிக்கப்பட்டுள்மை குறிப்பிடத்தக்கது. சமூக நிலை என்ற வகையிலும், மனநிலை என்ற
வகையிலும் பாதிக்கப்பட்ட பாடசாலைகளை கட்டியெழுப்பிய சாரார் என்ற வகையில்
பாதிப்புக்குள்ளாகும் எமது மனநிலையை கருத்திற்கொண்டு மனித உரிமை என்ற நிலையில்
இருந்தும் பதில் அதிபர்கள் தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படல் வேண்டும்.

8. இலங்கை கல்வித்துறையின் முக்கிய நிறுவனங்களாக பாடசாலைகளே திகழ்கின்ற நிலையில்
அப் பாடசாலைகளை நிர்வகிப்பதில் பதில் அதிபர்களின் வகிபங்கையும், அவர்களது
பங்களிப்பையும் மதிக்கும் வகையில் பொறிமுறை ஒன்றை ரருவாக்குதல் வேண்டும்.
அதிபர்களின் இடமாற்றம், ஓய்வு போன்ற காரணங்களினால் ஏற்படும் வெற்றிடத்தை சிரேஸ்ட
அல்லது முன்வரும் தன்மைக்கேற்பவே பதில் அதிபர்கள் நியமிக்கப்படுகிறார்கள். இன்றைய
தினத்திலும் பதில் அதிபர்கள் நியமனம் பெறுவது தவிர்க்க முடியாததாக உள்ளமை
குறிப்பிடத்தக்கது. மேலும் அதிகஸ்ட, கஸ்ட பிரதேச பாடசாலைகள் பதில் அதிபர்களின்
பொறுப்பிலேயே உள்ளமை கவனிக்கதக்கது. இவ்வாறான யதார்த்த நிலைகளை
கருத்திற்கொண்டு இவர்களின் சேவை முக்கியத்துவத்தை உணரும் வகையில்
பொறிமுறையை உருவாக்குவதுடன் அதிபர் பிரமானக்குறிப்பிலும் உத்தரவாதப்படுத்தப்படல்
வேண்டும். மேலும் சேவைக்காலமும் ஒருவரின் பதவி தரத்தையும், பதவி உயர்வையும்
நிர்ணயம் செய்கின்றதன் அடிப்படையில் பதில் அதிபர்களின் சேவைக்காலங்களையும்
உள்ளீர்த்து அதிபர் பிரமானக்குறிப்பினுள் உத்தரவாதப்படுத்தல் வேண்டும். கடந்த
காலங்களில் இந் நடைமுறை பின்பற்றப்பட்டு வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இதற்கான
விசேட அம்சங்கள் நடைமுறைப்படுத்தப்பட்ட சம்பவங்களும் உள்ளன. எடுத்துக்காட்டாக திரு.
பதியூதீன் முகமது அவர்கள் கல்வி அமைச்சராக பதவி வகித்த காலக்கட்டத்தில் ஆசிரியர்
நியமனம் மற்றும் பாடசாலைகளை அரசு பெறுப்பேற்ற போது பின்பற்றிய அணுகுமுறைகளை
குறிப்பிடலாம். அவ்வாறே பெருந்தோட்ட பாடசாலைகளை அரசு பொறுப்பேற்க பின்பற்றப்பட்ட
அனுகுமுறைகள் குறிப்பிடத்தக்கதாகும்.

அகில இலங்கை பதில் அதிபர்கள் சங்கத்தின் சார்பில்,
அ.லெட்சுமணன், தலைவர்,

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    பெற்றோலின் விலை குறைக்கப்பட்டது

    August 30, 2026

    அனுர குமார திசாநாயக்க ஓர் அதிசயம்” – தமிழ் தலைவர்கள் தரகர்கள் என சிதம்பரம் கருணாநிதி விமர்சனம்…*

    August 30, 2026

    நுவரெலியாவில் கணவனால் தாக்குதலுக்கு உள்ளான மனைவி பலி – கணவன் பொலிஸில் சரண்.

    August 30, 2026

    கோதுமை மாவின் விலை அதிகரிப்பு மக்கள் பெரும் கவலையில்

    August 30, 2026
    Editors Picks

    பிரிடோவின் புதிய முயற்சி-அக்கரப்பத்தனை பிரதேசத்தில் தோட்ட மக்களுக்கு முகவரி பெற்றுக்கொடுக்கும் வேலைத்திட்டம் ஆரம்பம்

    August 31, 2026

    பெற்றோலின் விலை குறைக்கப்பட்டது

    August 30, 2026

    தலவாக்கலை ட்ரூப் பாதை அபிவிருத்தி வேலைத்திட்டம் இன்று அடிக்கல் நாட்டி ஆரம்பித்து வைக்கப்பட்டது. 

    August 30, 2026

    அனுர குமார திசாநாயக்க ஓர் அதிசயம்” – தமிழ் தலைவர்கள் தரகர்கள் என சிதம்பரம் கருணாநிதி விமர்சனம்…*

    August 30, 2026

    பிரிடோவின் புதிய முயற்சி-அக்கரப்பத்தனை பிரதேசத்தில் தோட்ட மக்களுக்கு முகவரி பெற்றுக்கொடுக்கும் வேலைத்திட்டம் ஆரம்பம்

    August 31, 2026

    பெற்றோலின் விலை குறைக்கப்பட்டது

    August 30, 2026

    தலவாக்கலை ட்ரூப் பாதை அபிவிருத்தி வேலைத்திட்டம் இன்று அடிக்கல் நாட்டி ஆரம்பித்து வைக்கப்பட்டது. 

    August 30, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.