Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

ஒலிபெருக்கி பயன்பாட்டிற்கு புதிய வழிகாட்டுதல்கள்: மீறினால் உபகரணங்கள் பறிமுதல் என பொலிஸ் திணைக்களம் எச்சரிக்கை!

August 31, 2026

சர்வதேச உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காகப் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய பூட்டான் பயணம்!

August 31, 2026

யாழ்ப்பாணத்தில் சோகம்: விடுமுறை நாளில் அலுவலகப் பணிக்குச் சென்ற பெண் உத்தியோகத்தர் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு!

August 31, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » பிரிடோவின் புதிய முயற்சி-அக்கரப்பத்தனை பிரதேசத்தில் தோட்ட மக்களுக்கு முகவரி பெற்றுக்கொடுக்கும் வேலைத்திட்டம் ஆரம்பம்
மலையகம்

பிரிடோவின் புதிய முயற்சி-அக்கரப்பத்தனை பிரதேசத்தில் தோட்ட மக்களுக்கு முகவரி பெற்றுக்கொடுக்கும் வேலைத்திட்டம் ஆரம்பம்

ThanaBy ThanaAugust 31, 2026No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

200 ஆண்டுகளாக நிரந்தர முகவரியின்றி வாழும் பெருந்தோட்ட மக்களுக்கு நிரந்தர முகவரி – பிரிடோவின் புதிய முயற்சி

அக்கரப்பத்தனை பிரதேசத்தில் தோட்ட மக்களுக்கு முகவரி பெற்றுக்கொடுக்கும் வேலைத்திட்டம் ஆரம்பம்

இலங்கையின் மலையகப் பகுதிகளில் சுமார் 200 ஆண்டுகளாக பரம்பரை பரம்பரையாக வாழ்ந்து வரும் பெருந்தோட்ட மக்கள், இன்றளவும் நிரந்தர முகவரி இல்லாத காரணத்தினால் பல்வேறு அடிப்படை உரிமைகள் மற்றும் அரச சேவைகளை முழுமையாகப் பெற்றுக்கொள்வதில் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், பெருந்தோட்ட மக்களுக்கு நிரந்தர முகவரியை பெற்றுக்கொடுக்கும் நோக்கில் பிரிடோ (PREDO) நிறுவனத்தின் ஏற்பாட்டில் அக்கரப்பத்தனை பிரதேசத்தில் உள்ள பல்வேறு தோட்டங்களில் விசேட வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

அதன் ஒரு கட்டமாக கிளாஸ்கோ கீழ்ப்பிரிவு தோட்டத்தில் மக்களுக்கு நிரந்தர முகவரியின் அவசியம் மற்றும் அதனைப் பெற்றுக்கொள்வதற்கான நடைமுறைகள் தொடர்பான தெளிவூட்டல் கூட்டம் நேற்று நடைபெற்றது.

முன்பள்ளி ஆசிரியை குமுதினி தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், இணைப்பாளர் புஷ்பராஜ் மற்றும் தபால் நிலைய உத்தியோகத்தர் திரு. சீலன் ஆகியோர் கலந்துகொண்டு, நிரந்தர முகவரி பெறுவதன் முக்கியத்துவம், அதனால் கிடைக்கக்கூடிய நன்மைகள் மற்றும் முன்னெடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக மக்களுக்கு தெளிவூட்டினர்.

இதன்போது, தோட்ட மக்களின் நிரந்தர முகவரி தொடர்பான பணிகளை தொடர்ந்து முன்னெடுப்பதற்காக மக்கள் குழுவொன்றும் அமைக்கப்பட்டது.

நீண்ட காலமாக முகவரியற்ற நிலையில் வாழ்ந்து வரும் பெருந்தோட்ட மக்களுக்கு அடையாளத்தையும் உரிமையையும் உறுதிப்படுத்தும் முக்கியமான முயற்சியாக இத்திட்டம் பார்க்கப்படுகின்றது.

இந்த வேலைத்திட்டத்தின் மூலம் மிக விரைவில் தோட்ட மக்களுக்கு நிரந்தர முகவரிகள் வழங்கப்பட்டு, அவை பிரதேச செயலகத்திற்கும் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

200 ஆண்டுகால வாழ்வுக்கு பின்னரும் முகவரியற்றவர்களாக இருக்க வேண்டிய நிலைக்கு முற்றுப்புள்ளி வைத்து, பெருந்தோட்ட மக்களின் அடிப்படை உரிமைகளை உறுதிப்படுத்தும் நோக்கில் முன்னெடுக்கப்படும் இம்முயற்சி வரவேற்கத்தக்கதாகும்.

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    ஒலிபெருக்கி பயன்பாட்டிற்கு புதிய வழிகாட்டுதல்கள்: மீறினால் உபகரணங்கள் பறிமுதல் என பொலிஸ் திணைக்களம் எச்சரிக்கை!

    August 31, 2026

    பெற்றோலின் விலை குறைக்கப்பட்டது

    August 30, 2026

    தலவாக்கலை ட்ரூப் பாதை அபிவிருத்தி வேலைத்திட்டம் இன்று அடிக்கல் நாட்டி ஆரம்பித்து வைக்கப்பட்டது. 

    August 30, 2026

    அனுர குமார திசாநாயக்க ஓர் அதிசயம்” – தமிழ் தலைவர்கள் தரகர்கள் என சிதம்பரம் கருணாநிதி விமர்சனம்…*

    August 30, 2026
    Editors Picks

    ஒலிபெருக்கி பயன்பாட்டிற்கு புதிய வழிகாட்டுதல்கள்: மீறினால் உபகரணங்கள் பறிமுதல் என பொலிஸ் திணைக்களம் எச்சரிக்கை!

    August 31, 2026

    சர்வதேச உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காகப் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய பூட்டான் பயணம்!

    August 31, 2026

    யாழ்ப்பாணத்தில் சோகம்: விடுமுறை நாளில் அலுவலகப் பணிக்குச் சென்ற பெண் உத்தியோகத்தர் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு!

    August 31, 2026

    எபாமுல்ல கடற்கரையில் நீராடச் சென்று மூவர் பலி; சிறுவனைத் தேடும் பணி தீவிர வீச்சு!

    August 31, 2026

    ஒலிபெருக்கி பயன்பாட்டிற்கு புதிய வழிகாட்டுதல்கள்: மீறினால் உபகரணங்கள் பறிமுதல் என பொலிஸ் திணைக்களம் எச்சரிக்கை!

    August 31, 2026

    சர்வதேச உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காகப் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய பூட்டான் பயணம்!

    August 31, 2026

    யாழ்ப்பாணத்தில் சோகம்: விடுமுறை நாளில் அலுவலகப் பணிக்குச் சென்ற பெண் உத்தியோகத்தர் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு!

    August 31, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.