தெமோதரை ,எல்ல பகுதியில் உள்ள 9 வளைவு பாலத்தை பார்வையிட்டுக் கொண்டிருந்த ஐஸ்லாந்து நாட்டைச் சேர்ந்த இரு சுற்றுலாப் பயணிகள் குளவிக் கொட்டுக்கு இலக்காகி தெமோதரை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக எல்ல பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
குறித்த சம்பவம் நேற்று (25) பிற்பகல் இடம்பெற்றுள்ளது. குளவி கொட்டுக்கு இலக்கான 23 வயதுடைய இளைஞன் மற்றும் யுவதியின் உடல்நிலை கவலைக்கிடமாக இல்லை என வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
