முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவால் கைது!
முன்னாள் அமைச்சரும் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினருமான ரவி கருணாநாயக்க, கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
விசாரணை அதிகாரிகளால் விடுக்கப்பட்ட அழைப்புக்கு இணங்க, ரவி கருணாநாயக்க இன்று காலை சுமார் 8.15 மணியளவில் குறித்த ஆணைக்குழுவில் முன்னிலையாகியிருந்தார். அவரிடம் பல மணிநேரம் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்ட தீவிர விசாரணைக்குப் பின்னரே அதிகாரிகள் அவரைக் கைது செய்துள்ளனர்.
தேசிய லொத்தர் சபைக்கு அங்கீகரிக்கப்பட்ட உத்தியோகபூர்வ பணியமர்த்தல் நடைமுறைகளுக்குப் புறம்பாக, ஒப்பந்த அடிப்படையில் ஐவர் ஆட்சேர்ப்புச் செய்யப்பட்டுள்ளனர். பின்னர் அவர்கள் அவரின் தனிப்பட்ட பணியாளர்களாக இணைத்துக் கொள்ளப்பட்டமை தொடர்பிலான ஊழல் குற்றச்சாட்டுக்கள் குறித்தே இந்த விசாரணைகளும் கைது நடவடிக்கையும் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
