ஹட்டன் குயில் வத்தை பகுதியில் கண்டியிலிருந்து ஹட்டன் நோக்கி பயணித்த பஸ் வண்டியோடு பால் ஏற்றிச்சென்ற கெப்ரக வண்டி விபத்துக்குள்ளாகியுள்ளது.
குறித்த விபத்து இன்று பிற்பகல் 2.30 மணி அளவில் இடம்பெற்றுள்ளது.
விபத்தில் கெப் வண்டியை ஓட்டி சென்றவருக்கு சிறு காயம் ஏற்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
