ஹங்குராங்கெத்த -அதிகாரிகம வீதியில் வீட்டின் மீது மோதி விபத்துக்குள்ளான பேருந்து.
ஹங்குராங்கெத்ததவிலிருந்து அதிகாரிகம வழியாக மலுல்லவுக்கு சென்று கொண்டிருந்த ஹங்குராங்கெத்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
குறித்த விபத்து இன்றுகாலை இடம்பெற்றுள்ளது.
விபத்தில் சிறிய கடையொன்றும் வீடொன்றும் சேதமடைந்துள்ளன, மேலும் விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என எமது செய்தியாளர் தெரிவித்தார்,பேருந்து விபத்துக்குள்ளானபோது சுமார் 20 பயணிகள் பேருந்தில் இருந்தனர்.
விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை ஹங்குராங்கெத்த பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
