Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

ஹட்டன் நகரில் ஆடை விற்பனை நிலையத்தில் திருட்டு – சி.சி.டி.வி. காட்சிகள் வெளியானது

November 25, 2026

கினிகத்தேனை பகுதியில் கனரக வாகனம் குடைசாய்ந்து விபத்து சாரதிக்கு காயம்

November 25, 2026

இலங்கைக்கு எவ்வித சுனாமி அச்சுறுத்தலும் இல்லை

November 24, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » அக்கரப்பத்தனை பிரதேச சபை இ.தொ.கா வசம் – தலைவர் ரதிதேவி
Breaking

அக்கரப்பத்தனை பிரதேச சபை இ.தொ.கா வசம் – தலைவர் ரதிதேவி

ThanaBy ThanaJune 17, 2025No Comments2 Mins Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

(க.கிஷாந்தன்)

நடந்து முடிந்த உள்ளுராட்சி தேர்தலில் வெற்றிப் பெற்ற உறுப்பினர்களின் சத்தியாப்பிரமாண வைபமும் பதவிகளுக்கான தலைவர்கள் தெரிவும் நாடளாவிய ரீதியில் இடம்பெற்று வருகின்றது. அக்கரப்பத்தனை பிரதேச சபைக்கு தெரிவான உறுப்பினர்களின் தலைவர், உபதலைவர் தெரிவு 17.06.2025 அன்று மதியம் 02 மணியளவில் லிந்துலை நாகசேனை நூலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உறுப்பினர் திருமதி. சத்தியமூர்த்தி ரதிதேவி, திறந்த வாக்கெடுப்பு மூலம் பிரதேச சபையின் புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார், அதே நேரத்தில் தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் அல்லிமுத்து பிரதீப் தினேஷன் சபையின் உப தலைவராக ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அக்கரப்பத்தனை பிரதேச சபைக்கான தலைவர் மற்றும் உப தலைவர் ஆகிய தெரிவுகள் மத்திய மாகாண உள்ளுராட்சி மன்ற ஆணையாளர் ஏ.எம்.கே.பி.கே. சமிலா அத்தபத்து தலைமையில் இடம்பெற்றது. இதில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சார்பாக திருமதி. ரதிதேவி, ஐக்கிய மக்கள் சக்தி சார்பாக தேவராஜ் சந்திரகுமார் ஆகியோர் தலைவருக்காக போட்டியிட்டனர்.

இதில் திறந்த வாக்கெடுப்பிற்கு 8 வாக்குகள் கிடைக்கப்பெற்றதால், திறந்த வாக்கெடுப்பு இடம்பெற்றது. இதில் எட்டு வாக்குகளை பெற்று சபையின் தலைவராக இலங்கை தொழிலாளர் காங்கிராஸ் சார்பாக போட்டியிட்ட திருமதி. சத்தியமூர்த்தி ரதிதேவி தெரிவு செய்யப்பட்டார்.

எதிராக போட்டியிட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் தேவராஜ் சந்திரகுமார் 05 வாக்குகளே பெற்றுக்கொண்டார். இதில் ஜனநாயக தேசிய கூட்டமைப்பு மற்றும் ஈரோஸ் ஜனநாயக முன்னணி சார்பாக தெரிவான உறுப்பினர்கள் இருவர் வாக்களிப்பில் இருந்து விலகிக் கொண்டனர்.

இதே இந்த சபைக்கு உப தலைவர் தெரிவில் தேசிய மக்கள் சக்தி சார்பாக அல்லிமுத்து பிரதீப் தினேஷன் பெயர் முன்மொழியப்பட்டது. அதனையடுத்து, இரண்டாவது நபரின் பெயர் முன்மொழியப்படாததனால் தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் அல்லிமுத்து பிரதீப் தினேஷன் சபையின் உப தலைவராக ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

  1. அக்கரப்பத்தனை பிரதேச சபை 15 உறுப்பினர்களை கொண்டது.
  • தேசிய மக்கள் சக்தி – 04
  • இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் – 04
  • ஐக்கிய மக்கள் சக்தி – 04
  • ஜனநாயக தேசிய கூட்டமைப்பு – 01
  • ஈரோஸ் ஜனநாயக முன்னணி – 01
  • ஐக்கிய தேசிய கட்சி – 01
Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    ஹட்டன் நகரில் ஆடை விற்பனை நிலையத்தில் திருட்டு – சி.சி.டி.வி. காட்சிகள் வெளியானது

    November 25, 2026

    கினிகத்தேனை பகுதியில் கனரக வாகனம் குடைசாய்ந்து விபத்து சாரதிக்கு காயம்

    November 25, 2026

    இலங்கைக்கு எவ்வித சுனாமி அச்சுறுத்தலும் இல்லை

    November 24, 2026

    நாட்டின் பல பகுதிகளில் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் ஆங்காங்கே மழையோ அல்லது இடியுடன் கூடிய மழைக்கு சாத்தியம் .

    November 24, 2026
    Editors Picks

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.