காலி, கொஸ்கொட பகுதியில் இன்று (31) அதிகாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அடையாளம் தெரியாத நபர்கள் ரி56 துப்பாக்கியால் மேற்கொண்ட இந்த துப்பாக்கிச் சூட்டில் 23 வயது இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
