நீண்ட காலமாக கலந்துரையாடப்பட்டு வந்த தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வு பிரச்சனை குறித்து இன்று முக்கிய பேச்சுவார்த்தை பெருந்தோட்ட அமைச்சில் இடம்பெற்றிருந்தது .
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆட்சி அமைத்ததில் இருந்து தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வில்
ஒரு நீதியான தீர்வு கிடைக்க வேண்டும் என்றும் அதனை மிகத் துரிதமாக வழங்க வேண்டும் என்றும் பெருமுனைப்புடன் முன்னெடுத்து வந்தமை குறிப்பிடத்தக்கது.
அந்த வகையில் இன்றைய நாள் இக் கலந்துரையாடல் இடம் பெற்றுள்ளதோடு
பெருந்தோட்டத்துறை தொழிலாளர்களுக்கான சம்பளம் நாளொன்றுக்கு 1700 ரூபாவாக உயர்த்தப்பட வேண்டும் என்றும் அதேவேளை பெருந்தோட்டத்துறை பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் அழுத்தமாக வலியுறுத்தினர்.
மக்களின் பொருளாதார சுமை மற்றும் வாழ்க்கை செலவு அதிகரிப்பின் காரணமாக தோட்டத் தொழிலாளர்களது நியாயமான சம்பள அதிகரிப்பொன்றை வழங்க வேண்டிய கட்டாயத்தை அமைச்சர்கள் வலியுறுத்தினர்.
இதேவேளை கம்பனிகளின் பிரதிநிதிகள் பின்வரும் விடயங்களை தாம் எதிர் நோக்குவதாக சுட்டிக்காட்டினர்.
1. உற்பத்தி செலவு அதிகரிப்பு
2. ஏற்றுமதி வருமானங்கள் குறைவு
3. கம்பனிகள் இலாபம் ஈட்டுவதில் எதிர்நோக்கும் பிரச்சனைகள் குறித்து விளக்மளித்தனர்.
இறுதியாக இன்னும் ஒரு மாத கால அளவில் மற்றும் ஒரு பேச்சு வார்த்தைக்கு வருகை தந்து அவர்களுடைய நிலைப்பாட்டை உறுதியாக அவர்களுடைய நிலைப்பாட்டை உறுதியாக நிலைப்பாட்டை கூறுவதாக தெரிவித்ததோடு அதன் போது எமது சாதகமான முடிவினை நாங்கள் அறிவிப்போம் என்பதனை தெரிவித்துக் கொள்கின்றோம்
இப் பேச்சுவார்த்தையில் பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் திரு சம்மந்த வித்யாரத்ன பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தொழில் அமைச்சர் கலாநிதி அனில் ஜெயந்த பெர்னாண்டோ பிரதி அமைச்சர் மஹிந்த ஜெயசிங்க ஆகியோர் அரசாங்கத்தின் சார்பிலும் பெருந்தொட்ட கம்பெனிகளை பிரதிநிதித்துவப்படுத்தி அதன் சார்பில் சிரேஷ்ட நிறைவேற்று அதிகாரிகள் உள்ளிட்ட குழுவினரும் பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டனர்.

