‘கரம் கொடுப்போம் கடைசி மூச்சு உள்ளவரை’
என்ற தொனிப்பொருளுக்கு அமைவாக இயங்கி வருகின்ற தனியின் சிறகுகள் சமூக நலன்புரி அமைப்பின் முப்பத்து மூன்றாவது செயல் திட்டம் கண்டி மாவட்டத்தின் குருந்துவத்த பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட சமர்செட் தோட்டம், உடகநயந்தன்ன,
கம்பளையில் உலக சிறுவர் தின நிகழ்வுகளுடன் இனிதே நடைபெற்றது.
உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு 04.10.2025ம் திகதி சனிக்கிழமையன்று சமர்செட் தோட்டத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கலை நிகழ்ச்சிகளில் பங்குப்பற்றிய சிறுவர்களின் திறமைகளை ஊக்குவிக்கும் முகமாகவும், சிறுவர் தினத்தை சிறப்பிக்கும் முகமாகவும் தனியின் சிறகுகள் சமூக நலன்புரி அமைப்பின் தலைவர் எஸ்.எல்.எம் ஹசீம் அவர்களின் ஆலோசனைக்கு இணங்கவும், செயலாளர் எஸ்.யசோதை அவர்களின் அமுலாக்கத்திலும் அமைப்பின் அனைத்து அங்கத்தவர்களின் நெறியாள்கையிலும் சுமார் ஐம்பதிற்கும் மேற்பட்ட சிறுவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் தனியின் சிறகுகள் சமூக நலன்புரி அமைப்பின் பூரண நிதி அனுசரணை ஊடாக வழங்கி வைக்கப்பட்டது. நிகழ்வுகள் யாவும் இறைவழிபாட்டுடனும், மங்கள குத்துவிளக்கேற்றலுடனும், சிறப்பு அதிதிகள், விஷேட அதிதிகள் வரவேற்பு , வரவேற்புரை, மற்றும் வரவேற்பு நடனத்துடனும் நடைபெற்றது. இந்த நிகழ்வின் போது மேடையேற்றப்பட்ட நிகழ்வுகள் யாவும் சர்வ மதங்களையும் பிரதிபலிக்க கூடிய வகையிலும், மதிக்க கூடிய வகையிலும் மேடையேற்றப்பட்டிருந்தது. இந்த நிகழ்வில் சமர்செட் தோட்ட ஆலய பூசகர், குருந்துவத்த கிராமநிலதாரி பிரிவிற்கு பொறுப்பான பொலிஸ் அதிகாரி, தனியின் சிறகுகள் சமூக நலன்புரி அமைப்பின் நுவரெலியா மாவட்ட பிரதான ஒருங்கிணைப்பாளர் தேசபந்து திரு.எஸ்.நிமலஸ்பரன் ஜே.பி,
சமர்செட் தோட்ட வெளிக்கள உத்தியோகத்தர், குருந்துவத்த போக்குவரத்து பொலிஸ் அதிகாரி, சமர்செட் தோட்ட சிறுவர் அபிவிருத்தி நிலைய உத்தியோகத்தர், பெற்றோர்கள், சமூக ஆர்வலர்கள், நலன்விரும்பிகள், இளைஞர்கள் மற்றும் சிறுவர்கள் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

