Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

நட்டத்தில் இயங்கிய கடற்றொழில் நிறுவனங்கள் இன்று இலாபத்தில் – எதிர்க்கட்சியின் விமர்சனங்களுக்கு அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் பதிலடி

November 27, 2026

திட்வா பேரிடர்: பாதிக்கப்பட்ட பதுளை மாவட்ட மக்களுக்கு நிரந்தர தீர்வு வேண்டும் 

November 27, 2026

சாமர சம்பத் தசநாயக்க தொடர்ந்தும் விளக்கமறியலில்

November 27, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » ‘தமக்கென ஒரு இடம் – அழகான வாழ்க்கை’ தேசிய வீட்டுத்திட்டம் 2026
மலையகம்

‘தமக்கென ஒரு இடம் – அழகான வாழ்க்கை’ தேசிய வீட்டுத்திட்டம் 2026

ThanaBy ThanaJanuary 3, 2026Updated:January 3, 2026No Comments2 Mins Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

2026 ஆம் ஆண்டு வரவுசெலவுத் திட்டத்தின் கீழ் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ள அனைத்து வீட்டுத் திட்டங்களையும் உரிய காலத்திற்குள் நிறைவு செய்து மக்களிடம் ஒப்படைக்குமாறு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

அந்தத் திட்டங்களின் செயல்பாடுகளை ஒரே நிறுவனத்தின் கீழ் மேற்பார்வை செய்வதன் அவசியத்தையும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.

2026 வரவு செலவுத் திட்ட ஒதுக்கீட்டின் கீழ் செயல்படுத்தப்படும் “தமக்கென ஒரு இடம் –  அழகான வாழ்க்கை” தேசிய வீட்டுத்திட்டம் உள்ளிட்ட ஏனைய வீட்டுத் திட்டங்கள் மற்றும் தற்போதைய செயல்பாடுகளை மீளாய்வு செய்வதற்காக தேசிய வீட்டமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையின் அதிகாரிகளுடன் (02) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இவ்வாறு தெரிவித்தார்.

2026 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்ட ஒதுக்கீட்டின் கீழ் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்காக 10,200 மில்லியன் ரூபா செலவில்  செயல்படுத்தப்படும் வீட்டுத் திட்டம் மற்றும் யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்த மக்களுக்காக 5,000 மில்லியன்  ரூபா செலவில் செயல்படுத்தப்படும் வீட்டுத் திட்டங்களின் திட்டமிடல், செயல்பாடு மற்றும் நிறைவு செய்யவுள்ள காலக்கெடு தொடர்பில் ஜனாதிபதி இதன்போது அவதானம் செலுத்தினார்.

மேலும், தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையின் கீழ் கடந்த ஆண்டுகளில் ஆரம்பிக்கப்பட்டு இன்னும் முடிக்கப்படாத வீட்டுத் திட்டங்களை விரைவாக முடிப்பது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.

வீடமைப்பு, நிர்மாணிப்பு மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் வைத்தியர் சுசில் ரணசிங்க, வீடமைப்பு, நிர்மாணிப்பு மற்றும் நீர் வழங்கல் பிரதி அமைச்சர் டி.பி. சரத், ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் ரஸல் அபோன்சு, வீடமைப்பு, நிர்மாணிப்பு மற்றும் நீர் வழங்கல் அமைச்சின் செயலாளர் பொறியியலாளர் எல். குமுது லால் போகஹவத்த, திறைசேரியின் வரவு செலவுத் திட்ட திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ஜுட் நிலுக்சான் மற்றும் தேசிய வீடமைப்பு அதிகார சபையின் தலைவர் ஜே.கே. அரவிந்த ஸ்ரீ நாத் உட்பட தேசிய வீடமைப்பு அதிகார சபை மற்றும் நிதி அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

ஜனாதிபதி ஊடகப் பிரிவு

2026-01-02

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    திட்வா பேரிடர்: பாதிக்கப்பட்ட பதுளை மாவட்ட மக்களுக்கு நிரந்தர தீர்வு வேண்டும் 

    November 27, 2026

    நாட்டின் பல பகுதிகளில் பிற்பகலில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை

    November 27, 2026

    ஏழை எளிய மக்களின் பிரச்சினைகளைப் புரிந்துகொண்ட அரசாங்கம் எங்களுடையது” – பெல்மடுல்ல வீடமைப்பு நிகழ்வில் பிரதியமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் சூளுரை

    November 26, 2026

    பேருந்துப் பயணத்தின்போது அநாகரிகமாக நடந்துகொள்வதைத் தவிர்க்குமாறு பொதுமக்கள் கோரிக்கை!

    November 26, 2026
    Editors Picks

    நட்டத்தில் இயங்கிய கடற்றொழில் நிறுவனங்கள் இன்று இலாபத்தில் – எதிர்க்கட்சியின் விமர்சனங்களுக்கு அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் பதிலடி

    November 27, 2026

    திட்வா பேரிடர்: பாதிக்கப்பட்ட பதுளை மாவட்ட மக்களுக்கு நிரந்தர தீர்வு வேண்டும் 

    November 27, 2026

    சாமர சம்பத் தசநாயக்க தொடர்ந்தும் விளக்கமறியலில்

    November 27, 2026

    பலம் வாய்ந்த இந்திய ‘ஏ’ அணியை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி, இலங்கை ‘ஏ’ அணி இறுதிப் போட்டிக்கு

    November 27, 2026

    நட்டத்தில் இயங்கிய கடற்றொழில் நிறுவனங்கள் இன்று இலாபத்தில் – எதிர்க்கட்சியின் விமர்சனங்களுக்கு அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் பதிலடி

    November 27, 2026

    திட்வா பேரிடர்: பாதிக்கப்பட்ட பதுளை மாவட்ட மக்களுக்கு நிரந்தர தீர்வு வேண்டும் 

    November 27, 2026

    சாமர சம்பத் தசநாயக்க தொடர்ந்தும் விளக்கமறியலில்

    November 27, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.