Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

பது/ எல்வட்டன் தமிழ் வித்தியாலயம் இரண்டு தேசிய விருதுகளை வரலாற்றின் முதன்முறையாக பெற்றுள்ளது.

October 16, 2026

வட்டவளையில் லொறியும் ஜீப்பும் நேருக்கு நேர் மோதி விபத்து – ஒருவர் காயம்!

October 16, 2026

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச மற்றும் ஜானகி சிறிவர்தன ஆகியோரின் விளக்கமறியல் நீடிப்பு!

October 16, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » வெள்ளத்தில் அறுந்து விழுந்த இரும்பு பாலம் – அத்தியாவசிய தேவைகளுக்காக ஆபத்தான முறையில் ஆற்றை கடக்கும் மக்கள்.
Breaking

வெள்ளத்தில் அறுந்து விழுந்த இரும்பு பாலம் – அத்தியாவசிய தேவைகளுக்காக ஆபத்தான முறையில் ஆற்றை கடக்கும் மக்கள்.

ThanaBy ThanaFebruary 24, 2026No Comments2 Mins Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

செ,திவாகரன்.

வெள்ளத்தில் அறுந்து விழுந்த இரும்பு பாலம் – அத்தியாவசிய தேவைகளுக்காக ஆபத்தான முறையில் ஆற்றை கடக்கும் மக்கள்.

கடந்த வருடம் (2025) நவம்பர் மாதம் ஏற்பட்ட மோசமான காலநிலை காரணமாக நுவரெலியா லிந்துலை மெராயா பகுதியிலிருந்து ஹென்போல்ட் தோட்டத்திற்கு செல்லும் பகுதியில் ஆக்ரா ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் இரும்பு பாலம் அறுந்து ஆற்றில் விழுந்தது இதனால் முழுமையாக போக்குவரத்து துண்டிக்கப்பட்டது இப்பகுதியில் உள்ள குடியிருப்புகளுக்கு ஆபத்தான முறையில் ஆற்றை கடந்து செல்கின்றனர்.

குறிப்பாக லிந்துலை ஹென்போல்ட் தோட்டத்திற்கு கீழ் இயங்கும் மிளகுசேனை, ஊட்டுவெளி மற்றும் சென்டறர்கிளாஸ் போன்ற பகுதிகளில் வாழும் 800 இற்கும் மேற்பட்ட குடும்பங்கள் ஆபத்தான முறையில் ஆற்றை கடந்த சென்று வருகின்றனர்.

மேலும் சிறிய மழை பெய்து ஆற்றில் நீர் அதிகரிக்கும் சந்தர்ப்பங்களில் வசிக்கும் மக்கள் அந்த ஆற்று வழியாகச் செல்ல முடியாமல் 5 கி.மீ. தூரம் சுற்றிச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

தொடர்ந்து எதிர் வரும் நாட்களில் அதிக மழை பெய்து ஆற்றில் திடீர் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டால் கூட கிராம மக்கள் கிராமத்தை விட்டு வெளியேற முடி யாத நிலை ஏற்படும் எனவும் தெரிவிக்கின்றன.

லிந்துலை மெராயா தமிழ் வித்தியாலயத்தில் கல்வி கற்கும் 450 இற்கும் மேற்பட்ட பாடசாலை மாணவர்கள் ஆற்றில் மறுபக்கம் கரையில் தமது பாதணிகளைக் கழற்றி கையிலெடுத்துக் கொண்டு ஆற்று நீரைக் கடந்து வந்து மீண்டும் வீதியோரங்களில் சுத்தமான நீரில் கால்களை கழுவி மீண்டும் பாதணிகளை அணிந்து கொண்டு செல்வதைக் காணமுடிகிறது ஆசிரியர்களும் , அரசு மற்றும் தனியார் அலுவலக உத்தியோகத்தர்களும் அவ்வாறே சென்று வருகின்றனர்.

இதில் பாடசாலை செல்லும் சிறிய மாணவர்களை பெற்றோர் தோளில் தூக்கி சுமந்து கொண்டு, ஆற்றின் நடுவே கடந்து பாடசாலைக்கு அனுப்பி வைக்கின்ற அவல நிலை ஏற்பட்டுள்ளது.

இதுதொடர்பாக கிராம மக்கள் கூறியதாவது:-

விவசாயத்தை வாழ்வாதார மாகக் கொண்டு நாங்கள் வாழ்ந்து வருகிறோம் உணவுக்காக அத்தியாவசிய பொருட்களை வாங்க வேண்டும் என்றால் நுவரெலியா பிரதான நகருக்கோ அல்லது மெராயா நகருக்கோ செல்ல வேண்டும் தற்போது வெள்ளத்தில் அடித்து சென்ற பாலத்தினை இன்று வரை செய்து கொடுக்காமல் இருப்பதால் ஆற்றில் இறங்கி பல்வேறு சிரமங்களுக்கு இடையில் சென்று வருகிறோம்.

அத்தியாவசிய பொருட்கள் மற்றும் விவசாய பொருட்களை வாங்கிய பின்னர் தலைச்சுமையாக ஆற்றைக் கடந்து ஊருக்கு வருவதில் சிரமம் ஏற்படுகிறது.

பலநேரங்களில் முதியவர்கள், பெண்கள் ,சிறுவர்கள் சில பொருட்களை ஆற்றில் தவறவிடுவதும் உண்டு ஆற்றில் தண்ணீர் அதிகம் வரும்போது சுற்று வீதி வழியாக 5 கிமீ தூரம் சுற்றி முச்சக்கரவண்டி அல்லது இருசக்கர வாகனங்களில் சென்று பொருட்களை வாங்கும் நிலையுள்ளது எனத் தெரிவித்தனர் .

எனவே உடனடியாக பாதுகாக்க சென்று வர தற்காலிகமாக ஆற்றின் குறுக்கே பாலம் கட்டித்தர வேண்டும் என அப்பகுதி மக்கள் எதிர்பார்த்துள்ளனர் இதனால் பலரும் பயன்பெறுவார்கள் எனவும் இதற்கு பொறுப்பான அதிகாரிகள் இக்கோரிக்கை நீண்ட காலமாக கிடப்பில் போடப்பட்டுள்ளதால், அப்பகுதி மக்கள் அதிருப்தியில் உள்ளனர்.

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    பது/ எல்வட்டன் தமிழ் வித்தியாலயம் இரண்டு தேசிய விருதுகளை வரலாற்றின் முதன்முறையாக பெற்றுள்ளது.

    October 16, 2026

    வட்டவளையில் லொறியும் ஜீப்பும் நேருக்கு நேர் மோதி விபத்து – ஒருவர் காயம்!

    October 16, 2026

    நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச மற்றும் ஜானகி சிறிவர்தன ஆகியோரின் விளக்கமறியல் நீடிப்பு!

    October 16, 2026

    ஞானசார தேரரின் விடுதலையை வலியுறுத்தி ஜனாதிபதி செயலகத்திற்கு அருகில் பிக்குமாரின் போராட்டம் தொடர்கிறது

    October 16, 2026
    Editors Picks

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.