புத்தளம் கடயமோட்டை பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் பாடசாலை மாணவர்கள் இருவர் உயிரிழந்துள்ளனர்.
இந்த சம்பவம் வியாழக்கிழமை 05 பிற்பகல் ஒரு மணியளவில் இடம்பெற்றதாக பொலிசார் தெரிவித்தனர்.
மாணவர்கள் வீதியில் சென்றுக்கொண்டிருந்த போது லொறி ஒன்று மோதியதால் இந்த சம்பவம் ஏற்பட்டுள்ளது.
சம்பவ இடத்திலேயே மாணவர் ஒருவர் உயிரிழந்த நிலையில் பிரிதொரு மாணவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் .
