பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
பலத்த மழைக்கு வாய்ப்புள்ள பகுதிகள்
சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமத்திய மாகாணங்களிலும், திருகோணமலை மற்றும் குருநாகல் மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மில்லிமீட்டருக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் வெளியிட்டுள்ள வானிலை முன்னறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காலையில் லேசான மழை
மேல் மாகாணத்திலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் கடலோரப் பகுதிகளிலும் காலை வேளையில் லேசான மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அத்துடன், சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களில் அதிகாலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படலாம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
பொதுமக்களுக்கான அவசர எச்சரிக்கை
இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளையில் ஏற்படக்கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படும் அசம்பாவிதங்களைக் குறைத்துக்கொள்ளத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.
