Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

சுற்றுச்சூழல் பாதுகாப்பை காரணம் காட்டி மக்களின் வழிபாட்டு உரிமை மறுக்கப்படுகிறதா?

July 11, 2026

நாட்டின் சில பகுதிகளில் இன்றும் மழை

July 11, 2026

சேவைக்காலத்தை பூர்த்தி செய்து நாடு திரும்பும் கொரியத் தூதுவர் மியோன் லீ, ஜனாதிபதியின் செயலாளரைச் சந்தித்தார்

July 11, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » ஜனாதிபதி அநுர – இந்திய பிரதமர் மோடி பேச்சுவார்த்தையின் பலன்: நாளை இலங்கை வருகிறது இந்திய எரிபொருள் கப்பல்!
Breaking

ஜனாதிபதி அநுர – இந்திய பிரதமர் மோடி பேச்சுவார்த்தையின் பலன்: நாளை இலங்கை வருகிறது இந்திய எரிபொருள் கப்பல்!

ThanaBy ThanaMarch 27, 2026No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோருக்கிடையில் அண்மையில் இடம்பெற்ற இராஜதந்திர பேச்சுவார்த்தையின் ஒரு கட்டமாக, நாளை (28) இலங்கைக்குப் பெருமளவிலான எரிபொருள் கிடைக்கவுள்ளது.

கடந்த செவ்வாய்க்கிழமை இரு நாட்டுத் தலைவர்களுக்கும் இடையில் இடம்பெற்ற தொலைபேசி உரையாடலின் பெறுபேறாக இந்தத் தீர்மானம் எட்டப்பட்டுள்ளது. இதற்கமைய, நாளை கொழும்பு துறைமுகத்தை வந்தடையவுள்ள கப்பலில் பின்வரும் எரிபொருள் கையிருப்புகள் காணப்படுகின்றன:

டீசல்: 20,000 மெட்ரிக் தொன்

பெட்ரோல்: 18,000 மெட்ரிக் தொன்

இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் அறிவிப்பு

இலங்கையின் எரிசக்தித் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக இந்தியா வழங்கி வரும் தொடர்ச்சியான ஒத்துழைப்பின் மற்றுமொரு கட்டமாக இந்த எரிபொருள் கையிருப்பு அமைந்துள்ளதாக கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

“அண்டை நாட்டுக்கு முன்னுரிமை” (Neighborhood First) என்ற கொள்கையின் அடிப்படையில், இலங்கையின் பொருளாதார மற்றும் சக்திவள ஸ்திரத்தன்மைக்காக இந்தியா முன்னின்று உழைப்பதாக அந்த அறிவிப்பில் மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த எரிபொருள் வருகையானது நாட்டின் தற்போதைய எரிபொருள் விநியோகச் சங்கிலியை மேலும் வலுப்படுத்தும் என்றும், தட்டுப்பாடற்ற மின்சார உற்பத்தி மற்றும் போக்குவரத்துத் தேவைகளுக்கு இது பெரும் உதவியாக அமையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    சுற்றுச்சூழல் பாதுகாப்பை காரணம் காட்டி மக்களின் வழிபாட்டு உரிமை மறுக்கப்படுகிறதா?

    July 11, 2026

    நாட்டின் சில பகுதிகளில் இன்றும் மழை

    July 11, 2026

    சேவைக்காலத்தை பூர்த்தி செய்து நாடு திரும்பும் கொரியத் தூதுவர் மியோன் லீ, ஜனாதிபதியின் செயலாளரைச் சந்தித்தார்

    July 11, 2026

    மலையகத்தின் அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பில் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் மற்றும் ராதாகிருஷ்ணன் MP ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு

    July 10, 2026
    Editors Picks

    சுற்றுச்சூழல் பாதுகாப்பை காரணம் காட்டி மக்களின் வழிபாட்டு உரிமை மறுக்கப்படுகிறதா?

    July 11, 2026

    நாட்டின் சில பகுதிகளில் இன்றும் மழை

    July 11, 2026

    சேவைக்காலத்தை பூர்த்தி செய்து நாடு திரும்பும் கொரியத் தூதுவர் மியோன் லீ, ஜனாதிபதியின் செயலாளரைச் சந்தித்தார்

    July 11, 2026

    அக்கரப்பத்தனை -கிலைன்ளைன் பாடசாலையில் கல்வி முதுமாணிப் பட்டம் பெற்ற ஆசிரியர்களுக்குப் பாராட்டு விழா

    July 11, 2026

    சுற்றுச்சூழல் பாதுகாப்பை காரணம் காட்டி மக்களின் வழிபாட்டு உரிமை மறுக்கப்படுகிறதா?

    July 11, 2026

    நாட்டின் சில பகுதிகளில் இன்றும் மழை

    July 11, 2026

    சேவைக்காலத்தை பூர்த்தி செய்து நாடு திரும்பும் கொரியத் தூதுவர் மியோன் லீ, ஜனாதிபதியின் செயலாளரைச் சந்தித்தார்

    July 11, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.