மலையக மக்களின் காணி உரிமையை வலியுறுத்தி பதுளையில் ஆர்ப்பாட்டம்
பதுளை மாவட்ட சிவில் சமூக அமைப்புகளின் ஏற்பாட்டில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் (02) பதுளையில், ஊவா மாகாண சபை முன்பாக நடைபெற்றது. இதில் நூற்றுக்கணக்கான சிவில் சமூக ஆர்வலர்கள், இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
மலையக மக்களுக்கு நிலையான காணி உரிமை வழங்க வேண்டும் எனவும், மாடி வீடுகள் அல்லாது தனி வீடுகள் வழங்கப்பட வேண்டும் எனவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் கோரிக்கை முன்வைத்தனர்.
அத்துடன், டித்வா புயலால் பாதிக்கப்பட்ட மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும், அனர்த்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள குடியிருப்புகளுக்கு மக்களை மீண்டும் அனுப்ப வேண்டாம், தற்காலிக முகாம்களில் தங்கி வரும் பெண்கள் மற்றும் சிறார்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளும் முன்வைக்கப்பட்டன.
ஆர்ப்பாட்டத்தின் போது கோரிக்கைகள் அடங்கிய மகஜர் ஒன்று மாகாண ஆளுநரின் செயலாளரிடம் கையளிக்கப்பட்டது.
